முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். டி - 20 சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா ரைடர்சை வீழ்த்தியது

புதன்கிழமை, 16 மே 2012      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா, மே. - 16 - ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவி ல் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென் னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தி ல் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்க த்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி யது. இந்தப் போட்டியில் சென்னை அணி தரப்பில், மைக் ஹஸ்சே அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அணியை வெ ற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்குப் பக்கபலமாக எம். விஜய், கேப்டன் தோனி மற்றும் டுபிளெசிஸ் ஆகியோர் ஆடினர். முன்னதாக பெளலிங்கின் போது, ஜகாதி நன்கு பந்து வீசி 2 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினார். அவருக்கு ஆதரவாக ஹில்பென்ஹாஸ், அஸ்வி ன், ஜடேஜா, ரெய்னா மற்றும் டி.பிரா வோ ஆகியோர் ஆடினர்.  ஐ.பி.எல். போட்டியின் 63 - வது லீக் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் கேப்டன் தோ னி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேப்டன் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.  முதலில் களம் இறங்கிய கொல்கத்தா ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் னை எடுத்தது. அந்த அணி சார்பில் 1 வீரர் அரை சதமும், 1 வீரர் கால் சதமும் அடித்தனர்.  துவக்க வீரராக இறங்கிய கேப்டன் கா ம்பீர் அதிரடியாக ஆடி 43 பந்தில் 62 ரன் னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற் றும் 3 சிக்சர் அடக்கம். மெக்குல்லம் 29 பந்தில் 37 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, எம்.கே. திவாரி 12 ரன்னையும், யூசுப் பதான் 11 ரன்னையும், டி.பி. தா ஸ் 19 ரன்னையும், எடுத்தனர்.  சென்னை அணி தரப்பில், ஜகாதி 26 ரன் னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ஹில்பென்ஹாஸ், அஸ்வின் மற் றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்   கெட் எடுத்தனர்.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 159 ரன் னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை கொல்கத்தா அணி வைத்த து. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்னை எடுத்தது.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத ன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.
சென்னை அணி தரப்பில், துவக்க வீர ராக இறங்கிய மைக் ஹஸ்சே அதிரடி யாக ஆடி 39 பந்தில் 56 ரன்னை எடுத் தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக் சர் அடக்கம். எம். விஜய் 25 பந்தில் 36 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம்.
கேப்டன் தோனி 21 பந்தில் 28 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, டுபிளெசிஸ் 13 ரன்னையும், டி. பிராவோ 11 ரன்னையும் எடுத்தனர்.
கொல்கத்தா அணி சார்பில், சுனில் நரைன் 14 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். ஆர். பாட்டியா 33 ரன் னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக மைக் ஹஸ்சே தேர்வு செய்யப்பட்டார்.
---------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago