முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதியின் சொத்து மதிப்பு ரூ.41 கோடி

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.29 - தமிழக மக்களுக்காக பாடுபடும் ஏழை கருணாநிதி தனது சொத்துக் கணக்காக மனைவி, துணை பெயரில் உள்ளதாக 41 கோடி உள்ளதாக கூறியுள்ளார். இதில் இவரது குடும்ப உறுப்பினர்கள் கனிமொழி மற்றவர்கள் இல்லை. சாதாரணமாக மாற்று வேட்டி கூட இல்லாமல் சென்னை வந்த இந்தக் கருணாநிதி எப்படியெல்லாம் ஊழல் செய்தார் என்பதை, திமுக ஆட்சியைப் பற்றி விரிவாக விவாதித்து விசாரணை நடத்திய nullதிபதி சர்க்காரியா தெளிவாக சொல்லியிருக்கிறார்.

இன்று கருணாநிதி தேர்தல் அதிகாரி முன்பு தாக்கல் செய்துள்ள, ஆவணங்களின் படி அவர் மனைவியின் சொத்துக்களோடு சேர்த்து, மொத்த மதிப்பு 41 கோடி. இந்தச் சொத்துக்களில், இவரின், மொரீஷியஸ் தீவின் மொத்த ஜனத்தொகை அளவு உள்ள, இவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து சேராது. இவர், மனைவி தயாளு, துணைவி ராசாத்தியின் சொத்துக்கள் மட்டும் 41 கோடி. இந்த 41 கோடியும் எப்படி வந்தது என்பது அனைவருக்கும் தெரியும். கருணாநிதி, மேடை மேடையாகப் பேசி, கதை, வசனம் எழுதி முதல்வர் சம்பளம் வாங்கி வந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இன்று 41 கோடிக்கு அதிபதியாக இருக்கும் கருணாநிதி தன் வாழ்வை எப்படித் தொடங்கினார் தெரியுமா ? அவர் நெஞ்சுக்கு nullநீதியில் எழுதியதை பார்ப்போம்.

குடியரசு துணை ஆசிரியனாக இரு என்று பெரியார் பணித்ததோடு மட்டுமல்லாமல், அந்த இதழில் என்னைக் கட்டுரைகள் எழுத அனுமதித்து அதைப் படித்து மகிழ்ந்தார். எனக்கு மாதம் நாற்பது ரூபாய் சம்பளம், அதில் பிற்பகலும் இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலைச் சிற்றுண்டி, மாலைச் சிற்றுண்டிக்கு மாதம் பத்து ரூபாய் ஆகி விடும். இதரச் செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் ஐந்து ரூபாயை என்னை அண்டி வந்த அருமை மனைவுக்கு பத்மாவிற்கு மாதந்தோறும் திருவாரூருக்கு மணியார்டர் செய்து வந்தேன்.

என் திருமணச் செலவுக்காக நான் எழுதிய தூக்கு மேடை நாடகத்தை அண்ணா அவர்கள் தலைமையில் திருச்சியில் நடத்தினேன். நானே நடித்தேன். யாரிடமும் நாடகத்திற்காக நன்கொடை வசூலிக்கவில்லை. நாடகத்தில் மிச்சப் பட்ட தொகை எண்ணூறு ரூபாய்.

முதலில் மனைவி தயாளு அம்மாள்.ரொக்க கையிருப்பு ரூபாய் 30,000 நிரந்தர வைப்பு நிதி இந்தியன் வங்கி கோடம்பாக்கம் கிளை கோடியே 20 லட்சம்.3 கோடியே 50 லட்சமரூபாய் 3,90,373ரூபாய் 3,90,584ரூபாய் 3,90,584 ரூபாய் 3,90,584 ரூபாய் 3,98,247 ரூபாய் 32,50,255 இந்தியன் வங்கி கொத்தவால் பஜார் ரூபாய் 6,98,250 ரூபாய் ,59ரூய்3ரூபாய் 1,40,723, 

அடுத்து துணைவி ராசாத்தி அம்மாள்.இந்தியன் வங்கி, ராஜா அண்ணாமலை புரம் நிரந்தர வைப்பு நிதி. ரூபாய் 15,00,000 ரூபாய் 33,04,087 ரூபாய் 1,14,93,325  ரூபாய் 10,55,641 ரூபாய் 6 கோடியே 67 லட்சத்து 53 ஆயிரத்து 14 தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, ராயப்பேட்ட ரூபாய் 6 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 753 ரூபாய் 46,78,221 சேமிப்புக் கணக்கு, இந்தியன் வங்கி, ராஜா அண்ணாமலைபுரம். கையிருப்பு ரூ.11,378 தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, ராயப்பேட்டை ரூபாய்.4,84,027 தயாளு அம்மாள் வணிக முதலீடுகள்.

கலைஞர் டிவி பங்குகள் ரூபாய் 6 கோடியே 60 லட்சம ராசாத்தி அம்மாள் வணிக முதலீடுகள

வெஸ்ட்கேட் லாஜிஸ்ட்டிக்ஸ் பங்கு 2 கோடியே 50 லட்சம சொந்தத் தொழில் முதலீட ரூபாய் 2 கோடியே 56 லட்சத்து 81 ஆயிரத்து 878

வாகனங்கள்.

தயாளு அம்மாள்.

ஹோண்டா அக்கார்டு கார் ரூபாய்.16,02,321 இது வரை சொன்ன படி, கருணாநிதியின் மொத்த சொத்து மதிப்ப ரூபாய் 4 கோடியே 96 லட்சத்து 56 ஆயிரத்து 855 மனைவி மற்றும் துணைவிகளின் சொத்து மதிப்ப ரூபாய் 36 கோடியே, 2 லட்சத்து 47 ஆயிரத்து 287 இது போக தயாளு மற்றும் ராசாத்தியின் பெயரில் இருக்கும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்ப தயாளு ரூ.5,51,1000 ராசாத்தி ரூபாய் 3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628 கருணாநிதி, மனைவி, துணைவி ஆகியோரின் பெயரில் இருக்கும், சொத்துக்களின் மதிப்பு மட்டும் 44 கோடியே 18 லட்சத்து 93 ஆயிரத்து 770.

தன் பெயரில் மட்டும் பல கோடி சொத்துக்களை வைத்திருக்கும், ராசாத்தி அம்மாளின் நிதி நிலைமை என்ன என்பது குறித்து 1975-ம் ஆண்டு சர்க்காரியா விசாரணை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பட்டயக் கணக்கர் ஜெகதீசன் மூலமாக வருமானவரி அதிகாரிக்கு அனுப்பி 1973-ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் நாளிட்ட தனது கடிதத்தில் தர்மா (ராசாத்தி அம்மாள்) இந்த வீட்டை வாங்குவதற்காக அவர் கபாலியிடமிருந்து ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், எஞ்சியுள்ள 23 ஆயிரத்தை தனது சொந்த சேமிப்பிலிருந்து கட்டியதாகவும் கூறினார். ரூ.40 ஆயிரம் கொடுத்ததற்கு சான்றாக பதிவு பெறாத 1970ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் நாளிட்ட ஒப்பந்தம் ஒன்று இருக்கிறது. இது கபாலியின் பெயருக்கு அவர் எழுதிக் கொடுத்ததாகும். அதில் மேற்படி தொகை ரூ. 15 ஆயிரம் என்று மூன்று ஆறுமாதத் தவணைகளில் திருப்பிக் கொடுக்கப் படும் என்றம், அப்படிக் கொடுக்கத் தவறினால் மேற்படி சொத்தை கபாலிக்கு விற்று விடுவதாகவும் அதில் நிபந்தனை குறிப்பிடப்டிருந்தது. மேற்சொன்ன கடனைத் தவணைகளில் செலுத்த வேண்டும். இதற்குச் சான்றாக 1970ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21ம் நாளில் திருமதி.தர்மாவால் எழுதிக் கொடுக்கப் பட்டது.எழுபதுகளில், ராசாத்தி அம்மாளிடம் 40 ஆயிரம் இல்லாமல், கடன் வாங்கியிருப்பதை கவனியுங்கள்.

ஆனால் 40 ஆண்டுகளில் பலகோடி சொத்து எப்படி வந்தது என்று யாரும் கேள்வி கேட்க கூடாது கேட்டாள் தமிழீன விரோதி என்பார்கள். இன்னொரு முக்கியமான விஷயம் இந்த 41 கோடி ரூபாயும் டாக்கு மெண்ட்டில் மறைக்க முடியாத காரணத்தால் காண்பிக்கப்பட்ட கணக்கு ஸ்பெக்ட்ரம் பணம் எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்