முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோழவந்தான் அருகே குருவித்துறை கோவிலில்இன்று குருபெயர்ச்சிவிழா

வியாழக்கிழமை, 17 மே 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,மே.- 17 - சோழவந்தான் அருகே குருவித்துறை கோவியில் குருபெயர்ச்சி விழா லட்சார்ச்சனையுடன் துவங்கியது.
சோழவந்தான் அருகே குருவியத்துறை கிராமத்தில் சித்திர ரத வல்லப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் இக்கோயிலில் மட்டும் குருபகவான் தவக்கோலத்தில் சக்கரத்தாழ்வாருடன் தனிசந்நிதியில் காட்சியளிக்கிறார். இதனால் இக்கோயில் சிறந்த குருபரிகார ஸ்தலமாக கருதப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா வெகுசிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு குரு பகவான் இன்று மாலை 6.27 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயருகிறார். இதையொட்டி இங்கு மூன்று நாட்கள் குருபெயர்ச்சி விழா நடைபெறுகிறது. கடந்த15 -ம் தேதி காலை லட்சார்ச்சனையுடன் குருபெயர்ச்சி விழா துவங்கியது. கோவில் பட்டர்களான ரெங்கநாதன், ஸ்ரீதர், சடகோபலன் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் நேற்று இரவு 8 மணி வரை லட்சார்ச்சனை நடந்தது. இன்று காலை 8 மணிக்கு துவங்கி மாலை 4.30 -க்கு லட்சார்ச்சனை நிறைவு பெறுகிறது. இதன்பின் குரு பெயர்ச்சி பரிகார மகாயாகம் நடைபெறுகிறது. மாலை 6.27 மணிக்கு குருபகவானுக்கு திருமஞ்சனம், சிறப்பு பூஜை நடக்கிறது. இந்த வருடம் குருவிற்கு உகந்த நாளான வியாழக்கிமையான்று வருவதால் குருபெயர்ச்சி மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. குருபெயர்ச்சி விழாவையொட்டி டி.எஸ்.பி. தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்