முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 32 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை சுருட்டியது

வெள்ளிக்கிழமை, 18 மே 2012      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, மே. - 18  - ஐ.பி.எல். போட்டியில் மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத் தா நைட் ரைடர்ஸ் அணி 32 ரன் வித்தி யாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.  இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி தரப்பில், எம்.கே.திவாரி மற்றும் கேப்டன் காம்பீர் இருவரும் கால் சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். அவர்களுக்கு பக்கபலமாக, யூசுப் பதான், ஷாகிப் அல் ஹசன் ஆகி யோர் ஆடினர்.  பின்பு பெளலிங்கின் போது, சுனில் நரைன் 4 முக்கிய விக்கெட்டை வீழ்த்தி னார். காலிஸ், எல். பாலாஜி, ஷாகிப் அல் ஹசன் மற்றும் அப்துல்லா ஆகி யோர் அவருக்கு ஆதரவாக பந்து வீசி னர்.  ஐ.பி.எல். போட்டியின் 65 - வது லீக் ஆட்டம் மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் கேப்டன் ஹர்பஜன் சிங் தலைமையிலான மும்பை இந்திய ன்ஸ் அணியும், கேப்டன் காம்பீர் தலை மையிலான கொல்கத்தா நைட் ரைடர் ஸ் அணியும் மோதின.  இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய கொல்கத்தா அணி மும்பையி ன் பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடி ரன்னைக் குவித்தது. அந்த அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரி ல் 7 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்னை எடுத்தது.  கொல்கத்தா அணி சார்பில், எம்.கே.திவாரி அதிகபட்சமாக, 43 பந்தில் 41 ரன்னை எடுத்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். கேப்டன் கா ம்பீர் 23 பந்தில் 27 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அட க்கம். தவிர, யூசுப் பதான் 21 பந்தில் 21 ரன்னையும், ஷாகிப் அல் ஹசன் 13 ரன் னையும், ஆர். பாட்டியா 12 ரன்னையு ம் எடுத்தனர். 

மும்பை அணி தரப்பில், ஆர். பி. சிங் 33 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். தவிர, முனாப் படேல், மலிங் கா மற்றும் டி. ஸ்மித் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

மும்பை அணி 141 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை கொல்கத்தா அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையு ம் இழந்து 108 ரன்னில் சுருண்டது. 

இதனால் கொல்கத்தா அணி இந்த லீக் கில் 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

மும்பை அணி தரப்பில், நட்சத்திர வீரர் டெண்டுல்கர் அதிகபட்சமாக 24 பந்தில்  27 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்ட ரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். திணேஷ் கார்த்திக் 26 பந்தில் 21 ரன்னை எடுத்தா ர். இதில் 3 பவுண்டரி அடக்கம். தவிர, கிப்ஸ் 13 ரன்னையும், ரோகித் சர்மா 12 ரன்னையும், ராயுடு 11 ரன்னையும் எடு த்தனர். 

கொல்கத்தா அணி சார்பில், இளம் சுழ ற் பந்து வீச்சாளரான சுனில் நரைன் 15 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத் தார். தவிர, காலிஸ் மற்றும் எல். பா லாஜி தலா 2 விக்கெட்டையும், ஷாகி ப் அல் ஹசன் மற்றும் அப்துல்லா ஆகி யோர் தலா 1 விக்கெட்டையும் எடுத்த னர். இந்தப் போட்டியின் ஆட்டநாயக னாக சுனில் நரைன் தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்