முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ஜெய்கிந்துபுரம் பகுதியில் பணம் கொடுக்க திமுகவினர் முயற்ச்சி

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, மார்ச்.29 - மதுரை ஜெய்கிந்துபுரம் பகுதியில் வீடு,வீடாக சென்று வாக்காளர்களை விசாரிப்பது போல் பணம் கொடுக்க முயன்ற திமுகவினர் 3பேரை பிடித்து சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் அவர்களை விடுவித்தனர். சட்டமன்ற தேர்தலில் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கடுமையாக அமுல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அரசியல் கட்சியினர் வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால் திமுகவினர் இதை மீறி மதுரையின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கு சென்று வாக்காளர் பட்டியல் சரி பார்க்கப்படுவதாக கூறி பணம் கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.

  மதுரை பாரதியார் தெருவில் நேற்று முன்தினம் இரவு திமுகவை சேர்ந்த 3 பேர் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்துக்கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுக பகுதி செயலாளர் பூமிபாலகன் மற்றும் கூட்டணி கட்சியினர் ஜெய்கிந்துபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த பேரையும் பிடித்து சென்றனர். ஆனால் காலையில் அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் விடுவித்து விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அதிமுக பகுதி செயலாளர் பூமிபாலகன் மற்றும் அதிமுகவினர் ஜெய்கிந்துபுரம் போலீஸ் நிலையம் முன் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்