முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைவிமர்சனம் ஸ்ரீராம ராஜ்ஜியம்

ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012      சினிமா
Image Unavailable

 

ராமருக்கு (பாலகிருஷணா) முடி சூட்டப்பட்டு அயோத்தியை ஆள்கிறார். இவரது மனைவி சீதை (நயன்தாரா) ராவணனால் கடத்தப்பட்டு இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட காலத்தில் கற்பு கெடாமல் எப்படியிருந்திருப்பார் என்று பலர் பலவிதமாக அயோத்தியில் பேசிக்கொள்கிறார்கள். இந்த செய்தி ராமர் காதில் விழுகிறது. ஏற்கனவே மனைவி கற்பு மீது சந்தேகப்பட்டு மனைவியை அக்னி முன்பு சத்தியம் செய்ய சொன்னராமன் மீண்டும் ஊரார் பேச்சுக்கேட்டு கற்பிணியாக இருக்கும் மனைவி மீது சந்தேகப்படுகிறார். அப்போது தனது தம்பி லட்சுமனனை அழைத்து சீதையை காட்டில் விட்டுவிட்டு வரும்படி கூறுகிறார். சீதை வனவாசம் செல்கிறார். அங்கே வால்மீகி முனிவர் (நாகேஸ்வரராவ்) சீதைக்கு அடைக்கலம் கொடுக்கிறார். காட்டிலேயே சீதைக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கிறது. இவர்களுக்கு லசா, குசா என்று முனிவர் பெயர் சூட்டுகிறார். இந்த குழந்தைகள் ராமனின் கதையைக் கேட்டு மனைவியை கொடுமை செய்த செயலை வீதிகளில் பாடுகிறார்கள். இதை  ராமனின் தாயாரிடம் சொல்கிறார்கள். அந்த குழந்தைகளை அழைத்து வரச்சொல்கிறார் ராமன். குழந்தைகள் ராமன் முன்பு பாடுகிறார்கள். ராமன் துடிக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த குழந்தைகள் ராமனின் பிள்ளைகள் என தெரிய வருகிறது. அப்போது மனைவி  சீதை மற்றும் பிள்ளைகளை ராமன் ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பது க்ளைமாக்ஸ். ராமர் வேடத்தில் பாலகிருஷ்ணா அற்புதமாக நடித்திருக்கிறார். மனைவியை பிரிந்து வாழும்போது படும்துயரம். அதே நேரத்தில் ஊராரர் இழி சொல் கேட்டு மனைவியை ஒதுக்கி வைத்து மனம் குமுறுவது, வீட்டிலேயே சீதைக்கு சிலை வைத்து சீதையை வணங்குவது என பல இடங்களில் அற்புதமாக நடித்திருக்கிறார். சீதையாக நடித்திருக்கும் நயன்தாராவுக்கு நடிப்புக்கு இடமில்லை. அதே நேரத்தில் தன்னுடைய மகன்கள் தந்தை ராமனுடன் போரிடும் போது அதை தடுத்து இவர்தான் உங்கள் தந்தை என்று நயன்தாரா கூறும்போது கண்கள் கலங்க வைக்கிறது. வால்மீகி வேடத்தில் நாகேஸ்வரராவ்  அற்புதமாக நடித்திருக்கிறார். சீதைக்கு பாதுகாப்பு கொடுத்து அவருக்கு பணிவிடை செய்ய தனது குருகுலத்தில் உள்ளவர்களை நியமிப்பது நயன்தாராவை தன் மந்திர சக்தியால் ராமர் அரண்மனைக்கு சென்று காண செய்வது என பல இடங்களில் மனதில் நிற்கிறார். எல்லாத்தையும்விட மாஸ்டர் தனுஷ் (லசா) கெளரவ் (குசா) நடிப்பு கலகலப்பு. இதேபோல ராமர் அம்மாவாக கே.ஆர்.விஜயா, சீதா அம்மாவாக ரோஜா என பலர் சிறப்பாக நடித்துள்ளனர்.

டி.ஆர்.கே.ராஜீ ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமாண்டம். இளையராஜாவின் பின்னணி இசை  நாற்காலியில் அமர வைக்கிறது. கிருஷ்ணராவ் எடிட்டிங் விறுவிறுப்பை தருகிறது. படத்துக்கு மிகப்பெரிய பலம் கலை. ரவீந்தர், கிரண்குமார், பிரமாண்டமாக அமைத்து உள்ளனர்.  வசனம், பாடல்கள் பிறை சூடன், இயக்கம் பாபு, தயாரிப்பு பனிந்தரகுமார் (எ) கிரண், கணவன், மனைவி, உறவு எத்தகைய வலிமையானது  என்பதை வலிமையாக சொல்லியிருக்கும் படம் ஸ்ரீராமராஜ்யம்.

 

படவிளக்கம்

``ஸ்ரீராமராஜ்ஜியம்''​ பாலகிருஷ்ணா, நயன்தாரா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்