முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனியில் அக்னிநட்சத்திரம் திருவிழா: பக்தர்கள் கிரிவலம் சுற்றிவந்தனர்

திங்கட்கிழமை, 21 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

பழனி,மே.- 21 - பழனியில் அக்னிநட்சத்திரம் திருவிழாவையொட்டி நேற்று 3 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சுற்றிவந்தனர்.பழனி முருகன் மலைக்கோவில் அக்னிநட்சத்திரம் திருவிழா கடந்த 7 -ம் தேதி தொடங்கியது.   பக்தர்கள் பழனிமுருகன் மலைக்கோவில் அடிவாரம் பகுதியை கிரிவலம் சுற்றிவந்தனர்.நேற்று 14-ம் நாள்  அக்னிநட்சத்திரம் திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு அதிகாலை 2 மணிமுதல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சுற்றிவந்தனர். குறிப்பாக பெண்கள் கடம்பை மர மலர்கள் தலையில் சூடிவந்தனர். பல பக்தர்கள் ரேஸ்மாட்டுவண்டியில் கிரிசுற்றிவலம் வந்தனர். பக்தர்கள் கிரிசுற்றி வலம் வரும்பொழுது மலைக்கோவில் உள்ள மூலிகைகளில் பட்டு காற்று சஞ்சீவிக் காற்றாக பக்தர்கள் மீது படுவதால் அவர்களது உடலில் வெப்பம் சம்பந்தமான நோய்கள் குணமாகின்றது என்பது வழிவழியாக வரும் ஜதீகம் ஆகும். மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருப்பூர், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்ட பக்தர்கல் உள்பட சுமார் 3 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாக அதிகாரி பா.பாஸ்கரன், மங்கையர்கரசி செய்து இருந்தனர். முன்னதாக பழனி மலைக்கோவில் அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்