முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டு தண்ணிக் குடித்து வளர்ந்தேன்: பாலகிருஷ்ணா

புதன்கிழமை, 23 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.23 - ஆந்திராவில் பெரிய நடிகராக இருந்தாலும் தமிழ்நாட்டு தண்ணிக்குடித்து வளர்ந்தேன் என்று கூறினார். தெலுங்கு பட பிரபலமான நடிகர் பாலகிருஷ்ணா. தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகராக விளங்கியவர் மோகன்பாபு, இவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் படம் `தலைவன் வருவான். தெலுங்கில் ஊக்கொடுத்தாரா உலுக்கிப்படுத்தாரா என்ற பெயரில் உருவாகிறது. தமிழில் சேகர் ராஜா இயக்குகிறார். பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நாயகன். இன்னொரு நாயகனாக மோகன்பாபு மகன் மனோஜ்குமார் நடிக்கிறார். நாயகி தீக்ஷாசேத், இவர்களுடன் பிரபு, சுகாசினி, இளவரசு, பாண்டியராஜன் நிழல்கள் ரவி மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்காக பல கோடி செலவில் காந்தர்வன் மகால் ஒன்றை `செட்' அமைத்து அதில் படப்படிப்பு நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்துள்ள நிலையில் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வகையில் போஸ்டர் ரிலீஸ் செய்யும் ஒரு விழாவை படக்குழுவினர் நேற்று சென்னையில் நடத்தினார்கள். இதில், இயக்குனர் பி.வாசு, நடிகை பிரபா, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, சிம்பு, மனோபாலா, பானுசந்தர் என பலர் கலந்து கொண்டனர்.

`வருவான் தலைவன்' படவிளம்பர போஸ்டரை நடிகர் பாலகிருஷ்ணா இயக்குனர் பி.வாசு ஆகியோர் வெளியிட்டனர். பின்னர் நடிகர் பாலகிருஷ்ணா கூறியதாவது

தமிழ் ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நான் ஆந்திராவில் பெரிய நடிகராக இருந்தாலும் பிறந்து வளர்ந்து தமிழ்நாடு தான். தமிழ்நாட்டு தண்ணியை குடித்து வளர்ந்தேன். அதற்காக நன்றி கடன் பட்டுயிருக்கிறேன். இந்த படம் தமிழில் வருவான் தலைவன், என்ற பெயரிலும் தெலுங்கில் `ஊக் கொடுத்தாரா , உலுக்கிப்படுத்தாரா' என்ற பெயரிலும் உருவாகிறது. தமிழ் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். படத்தின் தயாரிப்பாளர் மோகன்பாபு பெரிய நடிகர் அவரை தமிழ் சினிமாதான் அடையாளம் காட்டியது. அதற்காக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கம் இல்லாமல் தமிழ் மக்களுக்கு ஓர் நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என்று அதிக செலவு செய்து தயாரித்து உள்ளார். நிச்சயமாக இந்த படம் வெற்றி படமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்