முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹஜ் பயண சலுகை ரத்து: தீர்ப்புக்கு பிறகே முடிவு

புதன்கிழமை, 23 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

புது டெல்லி, மே. 24 - ஹஜ் பயணிகளுக்கு அரசு வழங்கும் மானியத்தை ரத்து செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்புக்கு பிறகே மத்திய அரசு எந்த முடிவையும் மேற்கொள்ளும் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார். டெல்லியில் அகில இந்திய ஹஜ் மாநாடு நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து பேசிய எஸ்.எம். கிருஷ்ணா, 2012 ம் ஆண்டில் ஹஜ் பயணத்துக்கான ஏற்பாடுகளை அரசு முன்கூட்டியே தொடங்கி விட்டது. ஹஜ் பயணத் திட்டத்தை ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் அறிவிக்க அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் ஹஜ் பயண சலுகை தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் அரசு முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு ஹஜ் பயணத்துக்கு செல்ல விண்ணப்பித்தவர்களில் அதிகம் பேர் பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள்.
பயணத்தின் போது ஹஜ் பயணிகள் தங்குவதற்கு ஏதுவாக நிரந்தர குடியிருப்புகளை அமைக்க சவுதி அரேபிய அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றார். ஹஜ் பயணத்துக்கு மத்திய அரசு வழங்கும் மானியத்தை அடுத்த 10 ஆண்டுகளில் படிப்படியாக நிறுத்த வேண்டும் என்று கடந்த 8 ம் தேதி சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. அதை எதிர்த்து மத்திய அரசு மேல் முறையீடு செய்யுமா என்று கேட்ட போது, இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவையே பிறப்பித்துள்ளது. இறுதி தீர்ப்புக்காக மத்திய அரசு காத்திருக்கிறது. அதன் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்