முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரங்கசாமியை மீண்டும் முதல்வராக்க வேண்டும் புதுவையில் ஜெயலலிதா முழக்கம்

புதன்கிழமை, 30 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, மார்ச்.- 30 - புதுவை மாநிலத்தில் அ.தி.மு.க.-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்து மீண்டும் ரங்கசாமியை முதல்வராக்க வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான மக்களிடையே ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.  சட்டசபை தேர்தலையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். கும்பகோணத்தில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா, கடலூர் மாவட்டம் புவனகிரிக்கும், அதன்பின்னர் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கும் ஹெலிகாப்டரில் வந்து பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் சரியாக மாலை 6.55 மணிக்கு புதுச்சேரி ரோடியர் மில் திடலுக்கு பிரச்சார ஊர்தியில் வந்தார். அவரை கடலூரில் இருந்து புதுவை வரை 25 கி.மீ.தூரம் மக்கள் உற்சாகத்துடன் கையசைத்து வரவேற்றனர். ரோடியர் மில் திடலில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் அவரது பிரச்சார ஊர்தி நீந்தி வந்தது. அப்போது பொதுமக்களும், அ.தி.மு.க. மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் முண்டியடித்து பிரச்சார ஊர்தியை சூழ்ந்தனர். இவ்வளவு கும்பல் வரும் என்று தெரிந்தும் போதுமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடாததால் தம்பிதுரை எம்.பி.யும் மற்றும் சிலரும் மக்களை கட்டுப்படுத்திய பின்னர் அங்கிருந்த சொற்ப எண்ணிக்கையிலான போலீசார் பாதுகாப்பு கொடுக்க முடியாமல் திணறினர். இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் மற்றும் ஓம்சக்தி சேகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

மக்களும், தொண்டர்களும் உற்சாக மிகுதியால் விண்ணைமுட்டும் அளவு கோஷமிட்டவாறே இருந்தனர். இதையடுத்து மக்களிடம் உற்சாகத்துடன் சுமார் 12 நிமிடம் உரை நிகழ்த்திவிட்டு அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஜக்கு சின்னத்திலும், தோழமை கட்சிகளுக்கு  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சின்னத்திலும் வாக்களித்து மீண்டும் புதுச்சேரியில் ரங்கசாமியை முதல்வராக்க வேண்டும் என்று மக்களிடம், தொண்டர்களிடமும் கேட்டுக் கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்