முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

வெள்ளிக்கிழமை, 25 மே 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.25 - தமிழகத்தில்  உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை நடப்பு கல்வி ஆண்டில் அறுமுகமாகிறது. இதையொட்டி அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வரும் 28-ம் தேதி முதல் 31-ம் தேதிவரை பணியிடைப் பயிற்சி நடக்க உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சரின் ஆணைக்கிணங்க,  தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 2012-13 -ஆம் கல்வியாண்டு முதல் 1-ஆம் வகுப்பிலிருந்து 8 -ஆம் வகுப்புவரை முப்பருவக் கல்வி முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை சார்ந்து பொது வழிகாட்டுதல் கையேடும் பாடக் கையேடுகளும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ளது.
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறைப்படி கற்பித்தல் மற்றும் மதிப்பீடு செய்வது தொடர்பாக தமிழகத்திலுள்ள அனைத்து தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் 26 மற்றும் 27 தேதிகளில் பணியிடைப் பயிற்சியானது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் 1,14,402 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்திலுள்ள அனைத்து ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும், வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கும், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள்,  மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆகியோர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 22.05.2012 அன்று அனைத்து வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும், 24.05.2012, 25.05.2012 ஆகிய தேதிகளில் அனைத்து உயர்நிலை,  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மேலும், மே மாதம் 28 -ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை அனைத்து வகை நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 -ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை சார்ந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியானது அனைத்து மாவட்டங்களிலும் நான்கு ஒன்றியங்களை ஒருங்கிணைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பயிற்சி மையத்தில் நடத்தப்பட உள்ளது. எனவே, இப்பயிற்சியில் 6 முதல் 8 -ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் கலந்து கொள்ளுமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!