முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைவரும் ஏற்கும் வேட்பாளருக்கே ஆதரவு: கம்யூ.,

வெள்ளிக்கிழமை, 25 மே 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மே. 25 - ஜனாதிபதி தேர்தலில் அனைத்து கட்சியினரும் ஏற்கும் வேட்பாளருக்கே ஆதரவு என்று கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித்துள்ளன.  அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு வேட்பாளரை மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேர்வு செய்ய வேண்டும் என்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தெரிவித்துள்ளன. எனினும் ஜனாதிபதி தேர்தலில் தாங்கள் விரும்பும் வேட்பாளர் யார் என்பது குறித்து எதையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உட்பட நான்கு கம்யூனிஸ்டு கட்சிகள் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டன.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிரகாஷ் காரத், சீதாராம் எச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஏ.பி. பரதன், சுதாகர் ரெட்டி, டி. ராஜா, புரட்சிகர சோஷலிச கட்சியின் சந்திரசூடன், பார்வர்டு பிளாக் சார்பில் தேவேந்திர பிஸ்வாஸ் உள்ளிட்டோர் பங்கேற்று விவாதித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது,
ஜனாதிபதி தேர்தலுக்காக எவரது பெயரையும் நாங்கள் ஆலோசிக்கவில்லை. ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தான் பெயரை பரிந்துரைக்க வேண்டும் என்றனர். மக்களவை தலைவர் மீராகுமார் உள்ளிட்ட 3 பேர் பெயர்களை ஜனாதிபதி பதவிக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பரிந்துரைத்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பரதன், பல்வேறு அரசியல் தலைவர்களும் பலரது பெயரை பரிந்துரைத்துள்ளனர். இதில் பல்வேறு விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியதுள்ளது என்றார்.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பழங்குடியின தலைவரும், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான அஜீத்ஜோகி, பி.ஏ. சங்மாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அப்துல் கலாமை முதல்வர் ஜெயலலிதா ஆதரிக்க வேண்டுமென்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்