முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலைவாசி உயர்வுதான் மத்திய அரசின் சாதனை: கட்காரி

வெள்ளிக்கிழமை, 25 மே 2012      இந்தியா
Image Unavailable

மும்பை, மே. 25 - மத்தியில் 3 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனை விலைவாசி உயர்வு, ஊழல், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவைதான் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெறவுள்ள 2 நாள் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க அவர் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது,  மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. நாட்டில் மாற்றம் கொண்டு வருவது குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்திய பொருளாதாரம் கவலைக்கிடமாக உள்ளது. சமீபத்தில் நடந்த தேர்தலில் பஞ்சாபை நாம் தக்க வைத்து கொண்டிருக்கிறோம். கோவாவை கைப்பற்றியிருக்கிறோம். டெல்லி, மும்பை, நாகபுரி மாநகராட்சி தேர்தல்களில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆந்திரத்தில் நடந்த இடைத் தேர்தலில் நாம் வென்றுள்ளோம். கட்சியின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்