முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கியால் மிரட்டிய பைனான்ஸ் அதிபரிடம் விசாரணை

வெள்ளிக்கிழமை, 25 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மே.25 - பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய பைனான்ஸ் அதிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரை தத்தனேரி கொன்னவாயன் சாலை பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் ஜெகநாதன். நேற்று மாலை இவரது நிறுவனம் அருகே உள்ள கடையில் சிலர் தகராறு செய்து கொண்டிருந்தனர். தகராறு முற்றவே ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். அப்போது பைனான்ஸ் அதிபர் ஜெகநாதன் சண்டை விலக்க சென்றார். இதில் ஒரு கும்பல் இவரை தாக்க விரட்டியது. இதனால்ஆத்திரம் அடைந்த ஜெகநாதன் ஓடி வந்து நிதி நிறுவனத்தில் இருந்த தனது துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார். இதனால்அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

   உதவி போலீஸ்கமிஷனர் தனபால் தலைமையில் போலீசார் விரைந்து வந்து அங்கு திரண்டிருந்த கூட்டத்தை விரட்டினர். பின்னர் துப்பாக்கியால் சுட்ட ஜெகநாதனை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களை மிரட்டுவதற்காக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!