முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மருடன் நெருங்கிய நட்புறவுக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுக்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.- 28 - அண்டை நாடான மியான்மருடன் நெருங்கிய நட்புறவை வைத்துக்கொள்ள இந்தியா முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.  பிரதமர் மன்மோகன் சிங் 3 நாள் பயணமாக நேற்று புதுடெல்லியில் இருந்து மியான்மரின் புதிய தலைநகர் நாய் பிய் தாவுக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் புறப்பட்டு செல்லும்முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், மியான்மர் நாடு நமது அண்டை நாடு மட்டுமல்லாது நெருங்கிய நட்பு நாடாகும். மியான்மர் நாட்டுடன் நெருங்கிய நட்பு வைத்துக்கொள்ள இந்தியா எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும் மியான்மருடன் வர்த்தகம், பொருளாதாரம், முதலீடு தொடர்பாக நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ள புதிய வழிமுறைகள் வகுத்து செயல்படும் என்று கூறியுள்ளார். சமீபகாலமாக இருநாடுகளிடையே உள்ள உறவு பல துறைகளில் விரிவடைந்து வருவதோடு பலப்பட்டும் வருகிறது. இந்த உறவு என்னுடைய மியான்மர் பயணத்தால் மேலும் பலப்படுவதோடு இந்தியாவுக்கு மியான்மர் அதிபர் தெயின் செயின் வந்தபோது எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த உதவியாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மியான்மர் தலைநகர் நாய் பியி தாவில் அதிபர் தெயின் செயினை மன்மோகன் சிங் சந்தித்து பேசுகிறார். அப்போது இருநாடுகளிடையே வர்த்தகம், முதலீடு தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் ஏற்படலாம் என்று தெரிகிறது. மியான்மர் எதிர்க்கட்சி தலைவர் சூகியையும் சந்தித்து பேசுகிறார். கடந்த 1987-ம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, மியான்மருக்கு சென்றார். அதன் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் மியான்மருக்கு சென்றிருப்பது முதல் தடவையாகும். மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் அந்த நாட்டு பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சூகி கட்சி வேட்பாளர்கள் அமோக வெற்றிபெற்றனர். அதன் பிறகு மியான்மரில் ராணுவ ஆட்சி மாறி ஜனநாயக ஆட்சி மலரும் சூழ்நிலை உருவாகி வருகிறது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்