முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலைஉயர்வு குறித்து கருத்து சொல்ல பிரணாப் மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2012      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, மே. - 28 - பெட்ரோல் விலை உயர்வு குறித்து மேற்கொண்டு எந்த கருத்தையும் சொல்ல மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுத்து விட்டார். இந்த விஷயத்தில் தான் முன்பு கூறியது சரிதான் என்று அவர் தெரிவித்தார்.  பெட்ரோல் விலை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு லிட்டருக்கு ரூ. 7.54 வீதம் உயர்த்தப்பட்டது. வரலாற்றில் இதுவரை இல்லாத விலை உயர்வாகும் இது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, ஒரு படி மேலே போய் மக்கள் விடும் கண்ணீர் உங்களை சும்மா விடாது என்று மத்திய அரசை எச்சரித்தார். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பல்வேறு கட்சிகள் போராட்டங்களையும், பேரணிகளையும் நடத்தி வருகின்றன. அ.தி.மு.க. சார்பில் வரும் 29 ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து மேலும் கருத்து சொல்ல மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுத்து விட்டார். டெல்லியில் இருந்து கொல்கத்தா வந்த அவர் அங்கு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், நான் எதை சொல்ல வேண்டுமோ அதை முன்பே சொல்லி விட்டேன். மேற்கொண்டு சொல்ல எதுவுமில்லை என்று கூறி முடித்து கொண்டார். பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதுமே அவரிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த அவர், 2 ஆண்டுகளுக்கு முன்பே விலை நிர்ணய உரிமையை அரசு எண்ணெய் கம்பெனிகளிடம் விட்டுக் கொடுத்து விட்டது. எனவே விலையை உயர்த்தும் முடிவை எண்ணெய் கம்பெனிகள்தான் எடுத்துள்ளன. மத்திய அரசு எடுக்கவில்லை. அவர்கள்தான் எடுத்திருக்கிறார்கள். எங்களை பொறுத்தவரையில் பெட்ரோல் ஒரு கைவிடப்பட்ட பொருள் என்கிற பாணியில் பிரணாப் முகர்ஜி பதிலளித்துள்ளார். அவரது இந்த பதில் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தினாலும் ஆச்சரியமில்லை.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago