முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன்மோகன் ரெட்டியிடம் 2வது நாளாக விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2012      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், மே. - 28 - ஆந்திர முன்னாள் முதல்வரின் மகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியிடம் மத்திய புலனாய்வு துறையினர் நேற்று 2 வது நாளாக விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. இதையடுத்து தன்னை கைது செய்ய சதி நடப்பதாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவருக்கு பிறகு தனக்கே முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் அவரது மகனான ஜெகன் மோகன் ரெட்டி. ஆனால் காங்கிரஸ் மேலிடம் ஜெகனை நியமிக்காமல் ரோசய்யா போன்றவர்களை நியமித்தது. இதனால் வெறுத்துப் போன ஜெகன்மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரில் புதுக்கட்சி தொடங்கினார். பிறகு எம்.பி. தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து காங்கிரசுக்கு எதிராக அவர் போர்க்கொடி உயர்த்தி செயல்பட்டு வருகிறார்.  இதனால் கடுப்பாகிப் போன காங்கிரஸ் மேலிடம் ஜெகன்மோகனுக்கு தொல்லை கொடுக்க தொடங்கியது. ஜெகன்மோகன் ரெட்டி மீது அளவுக்கதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் சி.பி.ஐ. முன்னிலையில் ஆஜரானார் ஜெகன்மோகன். அப்போது அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  இந்த விசாரணை நேற்றும் 2 வது நாளாக தொடர்ந்தது. கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கும் மேலாக ஜெகன்மோகனை கிண்டி கிழங்கெடுத்து விட்டார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள். பல்வேறு முறைகேடுகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் தன்னை கைது செய்ய சதி நடப்பதாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். எந்த நேரத்திலும் அவர் கைதாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  இது குறித்து ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த கடப்பா எம்.பி. ஜெகன்மோகன், தன்னிடம் நடத்தப்பட்ட விசாரணை அமைதியாக நடந்ததாகவும், தான் சில விளக்கங்களை அளித்ததாகவும் மேலும் விளக்கங்கள் கேட்டாலும் அளிப்பேன். எந்த விசாரணையையும் சந்திப்பேன் என்றும் ஆவேசத்தோடு கூறினார். முன்னதாக, மத்திய புலனாய்வு துறையினர் மாநில கலால் துறை அமைச்சர் மொபிதேவி வெங்கடரமணாராவை ஏற்கனவே கைது செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்