முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தா தலைமையில் நடந்த பிரம்மாண்ட எதிர்ப்பு பேரணி

ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2012      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, மே. - 28 - பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் அக்கட்சியினர் பிரம்மாண்ட பேரணியை நடத்தினர். கொல்கத்தா நகரே அதிரும் வண்ணம் நடைபெற்ற இந்த பேரணி 5 கி.மீ. தூரத்துக்கு நடைபெற்றது.  மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மம்தா கட்சியும் இடம் பெற்றுள்ள நிலையிலும் இந்த பேரணி மூலம் அவர் தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார். மேற்கு வங்க முதல்வரான பிறகு மத்திய அரசின் முடிவை கண்டித்து மம்தா தெருவில் இறங்கி போராட்டம் நடத்துவது இதுவே முதல் முறையாகும். மத்திய ரயில்வே அமைச்சர் முகுல்ராய், கட்சியின் மாநில தலைவர்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.  முன்னதாக பெட்ரோல் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த மம்தா, மத்திய அரசின் இந்த முடிவு முற்றிலும் நியாயமற்றது. சாதாரண மக்கள் மீது மேலும் சுமை ஏற்றுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். மம்தாவின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க காங்கிரஸ், சர்வதேச அளவில் ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதுதான் பெட்ரோல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். அந்த நிலை மாறினால் பெட்ரோல் விலை குறைய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்