முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களை ஆக்கிரமித்த 140 பேர்மீது நடவடிக்கை

திங்கட்கிழமை, 28 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,மே.- 28 - மதுரை ஆதீனமடத்தின்  சொத்துக்களை ஆக்கிரமித்த 140 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளைய ஆதீனம் நித்தியானந்தா தெரிவித்தார்.  மதுரை ஆதீன மடத்தில் நேற்று சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றனர். இந்த முகாமை மதுரை ஆதீனம், இளைய ஆதீனம் நித்தியானந்தா ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் நித்தியானந்தா நிருபர்களிடம் கூறியதாவது, இந்த மருத்துவ முகாம் 2 நாட்கள் நடைபெறுகிறது. அனைத்து நோய்களுக்கும் இங்கு 10 டாக்டர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். ஸ்கேன் உள்பட அனைத்து பரிசோதனைகளும், மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த முகாமில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பயனடைவார்கள். மேலும் மதுரையில் ஆதீன மடத்திற்கு சொந்தமான இடத்தில்  47 மிஷின்களை கொண்டு இலவசமாக டயலிசிஸ் சிகிச்சை இலவசமாக வழங்கப்படும். மேலும் மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களை 140 பேர் ஆக்கிரமித்து உள்ளனர். இந்த சொத்துக்களை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்க உள்ளோம். உலகம் முழுவதும் எனக்கு ஒரு கோடி சீடர்கள் உள்ளனர். நான் கரைபடுத்தப்பட்டேனே தவிர கரைபடியவில்லை. சென்னை கோர்ட்டில் உள்ள வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன். நீதிதுறை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையும், மதிப்பும் உள்ளது. தமிழக முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் அவரை சந்தித்து பேசிவேன் என்றார்.    மதுரை ஆதீனம் கூறியதாவது, மதுரை ஆதீனம் ஆசிர்வாதம் செய்வதற்கு மட்டுமல்ல. கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு சமூக சேவைகளயும் செய்து வருகிறது. இதை அறியாமையாலும், பொறாமையாலும் சிலர் எதிர்த்து வருகிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அர்த்த மண்டபம் வரை நான் சென்றேன். என்னோடு வந்த இளைய மடாதிபதியை அனுமதிக்கவில்லை. மரபுப்படி மதுரை ஆதீனத்துடன் செல்லும் இளைய மடாதிபதியையும் அனுமதிக்க வேண்டும். ஆனால் இளைய ஆதீனத்தை அனுமதிக்க மறுத்தார்கள். இது தொடர்பாக கோவில் நிர்வாக அதிகாரியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்., பாண்டி ஆகிய 2 பேரும் பிடிபட்டனர். 

   அவர்களிடம் நடத்திய விசாரணையில் சந்திரசேகர் குடிக்க பணம் தராததால் கொலை செய்தோம் என வாக்கமூலம் அளித்தனர். மேலும் இது தொடர்பாக தலைமறைவாக உள்ல பாலமுருகனை வலைவீசி தேடிவருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்