முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனியில் வைகாசி விசாக விழா தொடங்கியது

திங்கட்கிழமை, 28 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

பழனி, மே 29 - பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி கொடியேற்றப்பட்டது. பழனியில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி விசாகம் திருவிழா புகழ்பெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் கடும் விரதம் இருந்து முருகப் பெருமானுக்கு பால்குடம் எடுத்துவந்து முருகப் பெருமானை பால் அபிஷேகம் செய்து வழிபடுவதுதான். பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் சேவலும், வேலும், மயில் உருவங்கள் பொறித்த மஞ்சள் நிறக்கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முருகப் பெருமான் சப்பரவாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருந்தார். இவ்விழாவில் கோவில் பேஸ்காரர் நாராயணன் ஜெயக்குமார் மற்றும் மணியம் சேகர், மலைக்கோயில் பிரசாத ஸ்டால் உரிமையாளர் என்.ஹரிகரமுத்து, காண்ட்ராக்டர் ப.நேரு, சங்கராலயம் சிவக்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்