முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி அருகே லாரி கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி

திங்கட்கிழமை, 28 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

தருமபுரி மே.29 - தருமபுரி அருகே மாங்காய் ஏற்றி சென்ற லாரி தலைகீழாக கவிழ்ந்ததில் பள்ளி மாணவ மாணவிகள் உட்பட 12 பேர் பலியாயினர்வ 33 பேர் படுகாயமடைந்தனர். தருமபுரி மாவட்ட பாலக்கோடு மாரவாடி பகுதியை சேர்ந்த துரைசாமி, சாமன் என்பவர்களுக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இந்த மாந்தோப்பில் இருந்து மாங்காய் லோடு ஏற்றி செல்வதற்காக காவேரிப்பட்டணம் அருகேயுள்ள சவுளூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கூலித்தொழிலாளர்கள் சுமார் 45 பேர் வேலைக்கு வந்துள்ளனர். இவர்களில் தற்போது பள்ளிக்கு கோடை விடுமுறை என்பதால் பள்ளியில் படிக்கின்ற மாணவ மாணவிகளும் வேலைக்கு வந்துள்ளனர். நேற்று முன் தினம் மாலை மாங்காய் லோடு லாரியில் ஏற்றிக்கொண்டு 45 பேர் அந்த லாரியில் சென்றுள்ளனர். இந்த லாரியை திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியே சேர்ந்த வெங்கடேசன் என்பவர் ஓட்டி சென்றார்.  லாரி ஜிக்காண்டஅள்ளி வழியாக கிருஷ்ணகிரி நோக்கி சென்றுள்ளது. லாரி திம்மராயனஅள்ளி மலைப்பகுதிக்கு வந்தபோது வளைவில் திருப்பத்தில் லாரி பிரேக்டவுனாகி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து  தலைகீழாக கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் துடிதுடித்து இறந்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை பாலக்கோடு மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகேந்திரமங்கலம் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சம்பவ இடத்திற்கு மாவட்ட கலெக்டர் லில்லி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித்குமார்சிங், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் ஆகியோர் விரைந்து வந்து மீட்பு பணியை பார்வையிட்டனர். 

இறந்தவர்களின் விபரம்

 கோவிந்தன்(45), மாது(35), பள்ளி மாணவி சோனியாகாந்தி(15), கல்லூரி மாணவி செல்வி(23), ஞானசவுந்தர்(37), ராஜாமணி(45), ராஜா(48), நஞ்சுண்டான்(52), அந்தோணி(13), சர்ச்சில் (50), இவர்கள் 10 பேரும் மிட்டப்பள்ளி சவூளூரை சேர்ந்தவர்கள் உமா(20), 

சந்தனா(16)  ஆகிய 12 பேரும் விபத்தில் உயிரிழந்தனர். இதனையடுத்து இறந்தவர்கள் 12 பேரின் உடல்கள் தருமபுரி, பாலக்கோடு அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மற்றும் வருவாய்துறை, காவல்துறை, அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடக்கும் வரையில் காந்திருந்து 12 பேரின் உடல்களை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 25 ஆண்களும், 2 சிறுமிகள் உட்பட 6 பெண்களும் படுகாயமடைந்தனர் இவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் 5 பேர் மட்டும் அதிஷ்டவசமாக காயம் ஏதுமின்றி தப்பினர்.விபத்துக்குள்ளான லாரியை ஓட்டி சென்ற திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த வெங்கடேசன்(42) கைது செய்யப்பட்டு அவர் மீது மகேந்திரமங்கலம் போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். நேற்று காலை விபத்து நடந்த இடத்தை சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி சஞ்சைகுமார் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்