முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மீண்டும் மின்சார உற்பத்தி

திங்கட்கிழமை, 28 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.29 - மேட்டூர் மின் நிலையத்தின் மூன்றாவது அலகு செயல்படத் தொடங்கியுள்ளதாகவும், 31-ம் தேதி தனது முழுதிறன் அளவான 840 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யத் துவங்கும் என்றும் கூறியுள்ள முதல்வர் ஜெயலலிதா பணியை விரைந்து நிறைவேற்றிய  பணியாளர்களுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

28.5.2012 - 10.5.2012 அன்று  அதிகாலை 00.30  அதாவது நள்ளிரவு 12.30 மணியளவில் மேட்டூர் அனல் மின் நிலையத்தின் நிலக்கரி கையாளும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.  அவ்வாறு ஏற்பட்ட தீ விபத்து விரைந்து அணைக்கப்பட்டதன் காரணமாக அனல் மின் நிலையத்திற்கு ஏற்படவிருந்த பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.  இந்தத் தீ விபத்தில் சந்திப்பு கோபுரங்கள், நிலக்கரியை சுமந்து செல்லும் ஊடிஎநலடிச க்ஷநடவ மற்றும்  அது தொடர்பான உபகரணங்கள் 180 மீட்டருக்கு முழுவதும் சேதமடைந்து விட்டதால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 840 மெகா வாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்த  நான்கு அலகுகளும்  மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தத் தீ விபத்து குறித்த விவரங்களை நான் 10.5.2012 அன்று சட்டமன்றப் பேரவையில் தெரிவித்தேன்.  

மேலும், சீரமைக்கும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றும், அவ்வாறு அதனை சீர் செய்ய சுமார் ஒரு மாத காலம் ஆகும் என்றும், எனினும்  அந்தப் பணிகள் விரைந்து முடித்திட  நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதையும்  சட்டமன்ற பேரவையில் தெரிவித்திருந்தேன்.  அப்போது ஒரு சில பத்திரிகைகள் இந்த சீர் செய்யும் பணிகளை முடிப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாகும்  என்ற தங்களது கருத்தை வெளியிட்டிருந்தன.   840 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்கும் வகையில் சீரமைக்கும் பணிகள் போர்க்கால  அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு  நான் உத்தரவிட்டிருந்தேன்.  இந்தத் தீ விபத்தில் இரண்டு சந்திப்பு கோபுரங்களுக்கு இடையே இருந்த நிலக்கரி கையாளும்  கட்டமைப்பு  முற்றிலும் சேதமடைந்திருந்தது.  நிலக்கரியை எடுத்துச் செல்லும் கேலரிகளைத் தாங்கி நிற்கும் அமைப்புகள் மின்சார மற்றும் கட்டுப்பாடு புதை வடங்கள்  முழுவதுமாக சேதம் அடைந்திருந்தன.  இதனருகில் அமைந்திருந்த தீப்பிழம்பு எண்ணெய்  குழாய் மற்றும் ராவி எடுத்துச் செல்லும்  குழாய்களும் பாதிக்கப்பட்டிருந்தன.  350 டன் அளவிலான இரும்பு கழிவுகளையும்  நீக்க வேண்டியிருந்தது.  இந்த அளவிலான சீரமைப்புப்  பணிகளை மேற்கொள்ள  சாதாரணமாகச் சுமார் இரண்டு மாத காலம் ஆகும்  என்றாலும், எனது அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளின் பேரில் இந்தப் பணி விரைந்து  முடிக்கப்பட்டுள்ளது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.   இரும்புக் கழிவுகள் அகற்றப்பட்டு சீரமைப்புப் பணிகள் 14.5.2012 அன்று துவங்கப்பட்டன.  மூன்று ஷிப்ட்டுகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு   சீரமைப்புப் பணிகள்  விரைவுப்படுத்தப்பட்டன.  இதன் காரணமாக 210 மெகாவாட் திறன் கொண்ட  மூன்றாம் அலகு  நேற்று (28.5.2012) அதிகாலை முதல்  செயல்படத் துவங்கியுள்ளது.   எஞ்சிய மூன்று அலகுகளும் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு 31.5.2012 முதல்  தனது முழுத் திறன் அளவான 840 மெகா வாட்  மின்சாரத்தையும் மேட்டூர் அனல் மின் நிலையம் உற்பத்திச் செய்யத்  துவங்கும்.  மிகக் கடினமான சீரமைக்கும் பணியில் இரவு பகல் பாராது  முழு ஈடுபாட்டுடன் பணியாற்றிய தமிழ்நாடு மின் வாரியத் தலைவர், அலுவலர்கள்,  பணியாளர்கள் மற்றும்  ஒப்பந்தப் பணியாளர்களுக்கு எனது மனமுவந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  மேட்டூர் அனல் மின் நிலையம்  மிகக் குறுகியக் காலத்தில்  சீரமைக்கப்பட்டுள்ளதால் தீ விபத்தினால் 10.5.2012 முதல்  ஏற்பட்ட 840 மெகா வாட் மின் இழப்பு  நீக்கப்பட்டு   31.5.2012 முதல் 840 மெகா வாட் மின்சாரம்  தொடர்ந்து கிடைக்கும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago