முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமை, 28 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.29 - சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. பெட்ரோல் விலை  உயர்வை கண்டித்து  சென்னை உள்பட தமிழகம் முழுவதும்  அதிமுகவும் ,பல்வேறு  அமைப்புகளும் இன்று   கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. கடந்த 23ந்தேதி பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. இதையடுத்து தமிழகத்தில் பெட்ரோல்டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவையான அளவிற்கு வினியோகம் செய்யப்படாததால் இருப்பு இருக்கும் வரை விற்பனை செய்து விட்டு பங்க்குகளை உரிமையாளர்கள் மூடிவிடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் டீசல் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மற்ற மாவட்டங்களை விட தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. பெரும்பாலான பங்க்குகள் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். தட்டுப்பாடு குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் ஆகிய 3 எண்ணை நிறுவனங்களின் அதிகாரிகள் வாய்திறக்க வில்லை.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இன்று 6 வது நாளாக நீடிக்கிறது. இன்னும் எத்தனை நாளுக்கு இந்த பிரச்சினை இருக்கும் என்று தெரிய வில்லை. நேற்று  முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பங்க்குகளுக்கு பெட்ரோல்டீசல் வினியோகம் செய்யப்பட வில்லை. இதனால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும்பாலான பங்க்குகள் மூடப்பட்டன.

மற்ற இடங்களை விட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. சென்னையில் மட்டும் யூரோ4 வகை டீசல் வினியோகம் செய்யப்படுகிறது. மற்ற மாவட்டங்களுக்கு யூரோ 3 வகை சப்ளை செய்யப்படுகிறது.

யூரோ3 வகை டீசல் சென்னையில் விற்க தடை உள்ளது. இந்த வகை டீசலால் காற்று அதிகம் மாசுபடும். யூரோ 4 வகை டீசல் சென்னையில் வினியோகம் செய்யப்படாததால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எண்ணை நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படாததால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியன் ஆயில் நிறுவனம் தரப்பில் கூறும் போது, எங்கள் நிறுவனத்தின் மூலம் வழக்கமாக வினியோகம் செய்யப்படும் அளவு பெட்ரோல்டீசல் சப்ளை செய்யப்படுகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. மற்ற எண்ணை நிறுவனங்கள் பற்றி எங்களுக்கு தெரியாது.ஐ.ஓ.சி. பங்க்குகளுக்கு எப்போதும் போல் வினியோகம் செய்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது. பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டிற்கான உண்மையான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை. நிலைமை சீராக இன்னும் 3 நாட்கள் ஆகும் என்று தெரிகிறது. 

இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஜெயலலிதா அறிவிப்பு:-

கடும் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில்  மாவட்டத் தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா முன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் 50 காசு என்ற அளவிற்கு கடுமையாக உயர்த்தி இருக்கிறது.  இது வரலாற்றில் எப்பொழுதுமே நிகழ்ந்திராத ஓர் அடாத செயல்.  இந்தக் கடும் விலை உயர்வினைக் கண்டித்து ஏற்கெனவே நான் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தேன்.  இந்த விலை உயர்வை நாடே கடுமையாக எதிர்க்கிறது.

இன்று நிலவுகின்ற பொருளாதார சூழலில் இவ்வளவு கடுமையான விலை உயர்வை மக்களால் தாங்க இயலாது என்பதால், இந்த விலை உயர்வை முற்றிலும் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.   ஆனால், திமுக அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.  மக்கள் உணர்வுகளை மதிக்கின்ற ஜனநாயகப் பண்பு இல்லாத அரசாக உள்ளது.   மத்திய அரசை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, மத்திய அரசை வலியுறுத்தி இந்தப் பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், பெட்ரோல் விலையை குறைக்கக் கோரி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் என்று அறிவித்து இருப்பது, பாலுக்கும் காவல், னைக்கும் தோழன் என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது.  தி.மு.க​வின் இந்த நடவடிக்கை ஒரு கண் துடைப்பு நாடகம் தான் என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல், சரிந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், பண வீக்கத்தை கட்டுப்படுத்தாமல், கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் 50 காசு என்ற அளவிற்கு உயர்த்தி மக்களை பெருத்த இன்னலுக்கு ஆளாக்கியுள்ள மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசைக் கண்டித்தும், இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், கழக அமைப்பு ரீதியான 52 மாவட்டத் தலைநகரங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும், செவ்வாய்க் கிழமை இன்று காலை 11 மணி அளவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.     கழக அமைப்பு ரீதியான 52 மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகளும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என்று அறிவித்துள்ளார். அதன்படி மாவட்டத் தலைநகரங்களில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டங்களை நடத்த அ.தி.மு.க. அமைப்பினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago