முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்மீது வீண்பழி சுமத்திவிட்டார்கள்: மாதவன் நாயர்

செவ்வாய்க்கிழமை, 29 மே 2012      இந்தியா
Image Unavailable

 

குலசேகரம், மே 29 - இந்திய விண்வெளி ஆய்வில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆண்ட்ரிஸ்-தேவாஸ் மல்டி மீடியா ஒப்பந்தம் தொடர்பாக என்மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை. ஆடிட்டர்கள் விஞ்ஞானிகள் அல்ல. இஸ்ரோ நிறுவனத்துக்கு நேர்மையாக உழைத்த என்னை மனம் வேதனைப்படக்கூடிய அளவுக்கு பழி கூறிவிட்டார்கள். 

இந்திய விண்வெளி ஆய்வில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. திட்டப் பணிகளும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. புதிய திட்டங்களுக்கு அரசிடம் ஒப்புதல் பெறுவதற்கு அதிகாரிகள் தயங்கும் நிலை காணப்படுகிறது. இந்தி விண்வெளி ஆய்வுத்துறையின் முக்கிய திட்டங்களாக மார்ஸ் மிஷன், சந்திராயன் -2, விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது போன்ற திட்டங்கள் முடங்கிய நிலையில் கிடக்கின்றன. மத்திய அரசு சில முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் கூட்டாக ஆலோசனை செய்யாத  நிலை காணப்படுகிறது. 

நமது திட்டமிடலும், வளர்ச்சியும் உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து தொடங்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்