முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதித்துறை இயக்குநராக ராக்கேஷ் குமார் பதவியேற்றார்

செவ்வாய்க்கிழமை, 29 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.29 - நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகத்தின் நிதித்துறை இயக்குநராக ராக்கேஷ் குமார்  பதவியேற்றார். என்.எல்.சி. நிறுவனத்தில் நிதித்துறை இயக்குநராகப் பணியாற்றி வந்த கே.சேகர்  இவ்வாண்டு மார்ச் 31 அன்று ஓய்வு பெற்றார்.  அதனைத் தொடர்ந்து, கேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா எனப்படும் இந்திய வாயு ஆணைய நிறுவனத்தின் துணை நிறுவனமான பிரம்மபுத்ரா கிராக்கர் மற்றும் பாலிமர் நிறுவனத்தில் நிதித்துறை இயக்குநராகப் பணி புரிந்து வந்த ராக்கேஷ் குமாரை  இந்திய அரசு என்.எல்.சி. நிறுவனத்தின் நிதித்துறை இயக்குநராக நியமித்துள்ளது. வணிகவியல் பட்டதாரியான  ராக்கேஷ் குமார்  ஹரியானா மாநிலம், ரோதக் நகரில் உள்ள மகரிஷி தயானந்தா பல்கலையின்கீழ் இயங்கும் பிரபல நிர்வாகவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வணிக நிர்வாகத்திற்கான பட்டமேற்படிப்பில் நிதித்துறையில் உயர்கல்வி பெற்றுள்ளார்.

லோகியா மெஷின்ஸ் லிட். என்ற நிறுவனத்தில் 1986-ம் ஆண்டு இளநிலை அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய இவர் படிப்படியாக உயர்வு பெற்று, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய வாயு ஆணையை நிறுவனத்தில் பல்வேறு பதவிகள் வகித்து, தற்போது என்.எல்.சி. நிறுவனத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.  

இடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பயிற்சிகளில் பங்கேற்றுள்ள  ராக்கேஷ் குமார். ஹைதராபாத்தில் உள்ள இந்திய வர்த்தகக் கல்வி நிலையத்தில், விற்பனையை முதன்மையாகக் கொண்டுள்ள நிறுவனங்களில் தலைமைப் பண்பினை மேம்படுத்தும் சிறப்பு மேலாண்மைப் பயிற்சியையும் பெற்றுள்ளார்.  மேலும், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான் போன்ற வெளி நாடுகளுக்கும் இவர் பயணம் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago