முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிபிஎஸ்இ தேர்வு முடிவு: சென்னை மாணவன் முதலிடம்

செவ்வாய்க்கிழமை, 29 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.29 - சிபிஎஸ்இ  தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 67,707 மாணவ மாணவிகளில் 61,339 தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் சென்னை மண்டலத்தில் 90.59 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மணிப்ரை சேர்ந்த மாணவன் ஒருவன் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தமிழக அளவில் சென்னை மாணவன் சன்சஜ் கணபதி முதலிடம் பெற்றுள்ளார். சிபிஎஸ்இ பாட திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பிளஸ் 2 தேர்வுகள், கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 13ம் தேதியுடன் முடிந்தது. இந்த தேர்வுகளை இந்தியா முழுவதும் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். சென்னை மண்டலத்தில்  67 ஆயிரத்து 707 பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் நேற்று காலை 11 மணி அளவில் டெல்லியில் உள்ள சிபிஎஸ்இ தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டன. அதை தொடர்ந்து இணைய தளத்திலும் வெளியிடப்பட்டது.

அண்ணா நகரில் இயங்கி வரும் சென்னை மண்டல அலுவலகத்தில் நேற்று காலை 11 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அந்தந்த பள்ளி நிர்வாகிகள் தேர்வு முடிவுகள் அடங்கிய பட்டியலை நேரில் வந்து வாங்கி சென்றனர். . சென்னை மண்டலத்தில்  61 ஆயிரத்து 339 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 88.87 சதவீத மாணவர்களும், 92.67 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மாணவர்கள் 88.87 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இந்தியாவிலேயே பாண்டிச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் மிக அதிகபட்சமாக 95.98 சதவீதம் தேர்வு பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.

அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவமாணவிகள் 95.57 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.  மணிப்ரைச் சேர்ந்த மாணவன் முகமது இஸ்மத் 500-க்கு 495 மதிப்பெண்கள் எடுத்து முதல் மாணவனாக தேர்வாகியுள்ளார். சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் தான் வெளியானது.

சென்னை மாணவன்:

கீழ்பாக்கம்  ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளி மாணவர் 490 மதிப்பெண் பெற்றுள்ளார். இது தமிழ்நாடு அளவில் முதலிடம் ஆகும். சென்னை, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரி உட்பட 10 மாநிலங்களை கொண்டது சென்னை மண்டலம் ஆகும். சென்னை மண்டல அளவில் சன்சஜ் கணபதி இரண்டாம் இடம் பெற்றவர் ஆவார். ராஜா வித்யாஸ்ரம் பள்ளி மாணவர் விக்ரம், மாணவி சுருதி ஆகியோர் 486 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளியின் முதல்வர் செல்வராணி சாதனை படைத்த மாணவர்களை பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்