முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைகிறது

செவ்வாய்க்கிழமை, 29 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

புதுக்கோட்டை,மே.29 - புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடையத் துவங்கியுள்ளது. அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக 32 அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கொண்ட 52 கொண்ட குழு தொகுதியில் முற்றுகையிட்டுள்ளது. புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூன் 12-ம் தேதி நடக்கவுள்ளது. அ.தி.மு.க. சார்பில் கார்த்திக் தொண்டைமானும் தே.மு.தி.க. சார்பில் ஜாகீர் உசேனும், ஐ.ஜே.க.சார்பிலும் சீனிவாசனும் மற்றும் சுயேட்சைகளும் போட்டியிடுகிறார்கள். தி.மு.க. , ம.தி.மு.க., பா.ஜ.க., வலது கம்யூனிஸ்ட், பா.ம.க.,விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை. தே.மு.தி.க.வுக்கு இடது கம்யூனிஸ்ட் ஆதரவு அளித்துள்ளது. வேட்புமனுத்தாக்கல் கடந்த 18-ம் தேதி தொடங்கி 25-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. கடந்த 26-ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு 25 மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்கள் வாபஸ் நேற்று மாலை 3 மணியுடன் முடிந்தது. இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் அதிகாரி ஆர்.டி.ஓ. முத்துமாரி இன்று வெளியிடுகிறார். அதன் பின் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு தேர்தல் ஜூன் 12-ம் தேதி நடக்கவுள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 15-ம் தேதி நடக்கவுள்ளது.

அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டமானுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட 32 அமைச்சர்கள் உள்பட 52 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா நியமித்துள்ளார். அ.தி.மு.க. அமைச்சர்கள், பொறுப்பாளர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களுக்கு பிரசாரம் மேற்கொள்ளும் பகுதிகள் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பிரித்தளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைவரும் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கின்றனர். தே.மு.தி.க. சார்பில் எம்.எல்.ஏ.க்கள் 28 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவும் தீவிரபிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஐ.ஜே.க. மற்றும் சுயேட்சைகள் தேர்தல் களத்தில் இருந்தாலும் அ.தி.மு.க., தே.மு.தி.க. இடையேதான் நேரடி போட்டியாக இது நிலவுகிறது. இதனால் இந்த இரு கட்சியினர்களும் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். புதுக்கோட்டையில் பிரசாரம் களைகட்டியுள்ளது. அ.தி.மு.க. வினர் பம்பரம்போல் சுழல தொடங்கிவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்