முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆங்சான் சூகியுடன் பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 29 மே 2012      இந்தியா
Image Unavailable

 

யாங்கூன், மே. 30 - மியான்மர் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரும் ஜனநாயகத்துக்காக போராடி வருபவருமான நோபல் பரிசு பெற்ற அரசியல் போராளி ஆங்சான் சூகியை நேற்று சந்தித்துப் பேசினார். மியான்மருக்கு மன்மோகன்சிங் 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர். அந்நாட்டு அதிபர் தெய்ன் சீனை நேற்று முன்தினம் மன்மோகன்சிங் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்போது இரு நாடுகள் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதைத் தொடர்ந்து ஆங்சான் சூகியை யாங்கூனில் நேற்று மன்மோகன்சிங் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது ஆங்சான் சூகியை இந்தியாவுக்கு வருகை தருமாறு சோனியா காந்தி சார்பாக மன்மோகன்சிங் வேண்டுகோள் விடுத்தார். சூகியுடனான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா, மியான்மரின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சூகியை மரியாதை நிமித்தமாக பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்துப் பேசியதாகத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்