முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-பாக். கிரிக்கெட் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு

புதன்கிழமை, 30 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

மொகாலி,மார்ச்.- 30 - இந்தியா-பாகிஸ்தான் இடையே இன்று மொகாலியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கு வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  உலக கோப்பைக்கான கிரிக்கெட் அரையிறுதிப்போட்டிக்கான ஒரு பிரிவு போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று மோதுகின்றன. இந்த போட்டியானது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலியில் நடைபெறுகிறது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இருந்து அந்த நாட்டுடன் உறவு கடுமையாக பாதித்தது. ஏறக்குறைய கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவும்-பாகிஸ்தானும் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடுகின்றன. அதுவும் இந்த போட்டியை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள். அதனால் விளையாட்டு போட்டியை பார்க்க வரும்படி பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி, மற்றும் பிரதமர் கிலானி ஆகியோர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு கிரிக்கெட் விளையாட்டை பார்க்க கிலானி இன்று மொகாலிக்கு வந்துள்ளார். விளையாட்டை பிரதமர் மன்மோகன் சிங்கும் பார்க்கிறார். விளையாட்டு போட்டியை இரண்டு நாட்டு தலைவர்களும் பார்ப்பதால் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. அதனால் விளையாட்டு போட்டிக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பஞ்சாபின் இதர மாவட்டங்களில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொகாலி மற்றும் அதன் அருகில் உள்ள சண்டிகார் நகரங்களில் லாட்ஜ்கள், ஓட்டல்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் இடங்கள்,பஸ்கள்,ரயில்கள் உள்ள மோட்டார் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குள்ளாகியுள்ளன. விளையாட்டு போட்டி நடக்கும் மைதானத்தை சுற்றிலும் பல அடங்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்