முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுத ஏவுகணை சோதனை நடத்தியது பாகிஸ்தான்

புதன்கிழமை, 30 மே 2012      உலகம்
Image Unavailable

 

ராவல்பிண்டி, மே. 30 - அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று குறுகிய தூரத்தில் இலக்கைத் தாக்கக் கூடிய ஹத்ப்-ஐ ஓ ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக நேற்று  விண்ணில் செலுத்தியது. அக்னி ஏவுகணையை இந்தியா விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி சோதனை நடத்தியதைத் தொடர்ந்து ஷாஹீன் ஏவுகணையை விண்ணில் செலுத்தி சோதனை நடத்தியது பாகிஸ்தான். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹத்ப்-ஐஐஐ என்ற ஏவுகணையை விண்ணில் செலுத்தியிருந்தது. இது 290 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடியது

இந்நிலையில் 60 கிலோ மீட்டர் தூரம் அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக் கூடிய ஹத்ப்-ஐஓ ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது. பாகிஸ்தானின் இந்த ஏவுகணை சோதனை வெற்றிக்கு அந்நாட்டின் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் கிலானி ஆகியோர் விஞ்ஞானிகளைப் பாராட்டியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்