முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்யமூர்த்தி பவனில் பெண் தொண்டர் தீக்குளிக்க முயற்சி-சோனியாவை சந்திக்க முடிவு

புதன்கிழமை, 30 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். - 30 - காங்கிரஸ் அதிகாரபூர்வமான வேட்பாளராக மைலாப்பூரில் அறிவிக்கப்பட்ட ஜெயந்தி தங்கபாலுவின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால், தற்போது அங்கு போட்டியிடும் தங்கபாலுவுக்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கபாலுவை கண்டித்து நேற்று சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். தங்கபாலுவை தலைவர் பதவியிலிருந்து நீக்கக்கோரி ஏப்ரல் 14ல் டெல்லி சென்று சோனியாவை சந்திக்க காங்கிரசார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த விவரம் வருமாறு: காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தங்கபாலுவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மயிலாப்nullர் தொகுதியில் ஜெயந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு தங்கபாலு வேட்பாளரானது காங்கிரசாரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை 11 மணி அளவில் மத்திய சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரசார் மாவட்ட பொதுச் செயலாளர் ரஞ்சன்குமார் தலைமையில் சத்தியமூர்த்தி பவனுக்கு திரண்டு வந்தனர். 

அலுவலக வாசலில் முற்றுகையிட்டு அமர்ந்தனர். அனைவரும் தங்கபாலுவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். மயிலாப்nullர் தொகுதி மகளிர் காங்கிரஸ் நிர்வாகி சுசீலா என்பவர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்தனர். இளைஞர் காங்கிரசார் தயாராக வைத்திருந்த தங்கபாலு உருவ பொம்மைகளை தீ வைத்து எரித்தனர். 

பின்னர் ரஞ்சன்குமார் கூறியதாவது:

மயிலாப்nullர் தொகுதி 20 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வெற்றி வாய்ப்புள்ள இந்த தொகுதியில் தங்கபாலு வேண்டும் என்றே அவரது மனைவியை போட்டியிடச் செய்துள்ளார். தகுதியான எத்தனையோ பேர் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. மனைவியின் மனுவை சரியாக nullர்த்தி செய்யாமல் தனது மனுவை மட்டும் சரியாக nullர்த்தி செய்து திட்டமிட்டு வேட்பாளர் ஆகி விட்டார்.

ராகுல்காந்தி இளைஞர் காங்கிரசை பலப்படுத்தினார். இளைஞர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்காமல் பணம் வாங்கிக் கொண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். கட்சியை அடமானம் வைத்த தங்கபாலு உடனே பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் செங்கை செல்லப்பன் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மகா கவிபாரதி நகரில் நடந்தது. பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:​ உண்மையான காங்கிரஸ் காரர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காத தங்கபாலு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். ஏப்ரல் 14​ந் தேதி டெல்லி சென்று சோனியாகாந்தியை சந்தித்து இதுகுறித்து மனு கொடுப்போம். டெல்லியில் உண்ணாவிர தம் இருக்கவும் முடிவு செய்துள்ளோம். சட்டமன்ற தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட எஸ்.சி. பிரிவு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு அளிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில பொதுச் செயலாளர் உலகநம்பி கூறும்போது, சோனியாகாந்தியை ஏமாற்றி மயிலாப்nullர் தொகுதியில் போட்டியிடும் தங்கபாலுவை தோற்கடிக்க வேண்டும். அவருக்கு எதிராக காங்கிரசார் பிரசாரம் செய்ய வேண்டும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago