முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை காஜலை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் யார்?

புதன்கிழமை, 30 மே 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, மே.30 - கோ படத்தில் நக்சலைட் தீவிரவாதியாக நடித்தவர் தமிழ்செல்வி என்ற காஜல். சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த இவர், தற்போது டி.வி. தொடர்களிலும், சினிமாக்களிலும் நடித்து வருகிறார். விவேக்குடன் காமெடி காட்சிகளிலும் நடித்து பிரபலமான நடிகை காஜலை ஆபாசமாக சித்தரித்து கடந்த 23 -ந்தேதி யாரோ அவரது போட்டோவை வெளியிட்டு விட்டனர். அவர் பேசுவது போல ஆபாசமாக வாசகங்களும் அதில் இடம் பெற்றிருந்தன. இதைப் பார்த்து வாலிபர்கள் பலர் காஜலுக்கு போன் செய்து செக்ஸ் தொல்லை கொடுத்தனர்.

இதனால் வேறு வழியின்றி அவர் தனது செல்போன் நம்பரை மாற்றினார். இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதியை சந்தித்து, காஜல் புகார் மனு ஒன்றையும் அளித்தார். அதில் ``லொகான்டோடாட் இன்'' என்ற செப்சைட்டில்தான் எனது போட்டோவை வெளியிட்டிருக்கின்றனர். இதனை வெளியிட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். காஜலின் போட்டோவை ஆபாசமாக வெளியிட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட வெப்சைட்டுக்கு நோட்டீஸ் ஒன்றையும் போலீசார் அனுப்பியுள்ளனர். அதில், நடிகை காஜலை ஆபாசமாக சித்தரித்தவர்கள் பற்றி தகவல் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கு வெப்சைட் சார்பில் அளிக்கப்படும் தகவலை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதொடர்பாக நடிகை காஜல் கூறியதாவது:-

``லொகான்டோடாட் இன்'' வெப்சைட் இலவச விளம்பரங்களை வெளியிடும் வெப்சைட்டாகும். இந்த வெப்சைட்டில் யார் வேண்டுமானாலும் எதையும் விற்பனை செய்வதற்கு விளம்பரங்களை வெளியிடலாம் என்ற நிலை உள்ளது. இதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்