முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பு

புதன்கிழமை, 30 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

புதுக்கோட்டை. மே.30 - புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் அமைச்சர்கள் வாக்குகள் சேகரித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானுக்கு ஆதரவாக புதுக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகள் கணபதிபுரம், வண்ணாரப்பட்டி, தொண்டைமான், ஊராணி, கல்லூக்காரன்பட்டி ஆகிய ஊராட்சிகள் உட்பட சுமார் 20 கிராமங்களில் உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், ஆதிதிராவிடத்துறை அமைச்சர் என்.சுப்பிரணியன் மற்றும் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

வாக்கு கேட்க சென்ற இடம் எல்லாம் அதிர்வேட்டு முழங்க ஆரத்தி எடுத்து நெற்றி திலகமிட்டு வாக்காளர்கள் வரவேற்றனர். மேலும் எல்லா கிராமங்களிலும் கார்த்திக் தொண்டைமானுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த சுற்று பயணத்தில் தமிழக உயர்க்கல்வி அமைச்சர் பழனியப்பன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன், புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் வெ.மு.குமார், மாவட்ட வழக்கறிஞர் இணைச்செயலாளர் வெங்கடேஷ், கந்தர்வக்கோட்டை ஒன்றிய குழுத்தலைவர் காட்டுநாவல் பி.சின்னப்பா, புதுக்கோட்டை முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்து, கல்லுக்காரன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் குமார், ஒன்றிய அவைத்தலைவர் எஸ்.ஆர்.அண்ணாத்துரை, முன்னாள் கவுன்சிலர் பெருமாள், ஒன்றிய இளைஞரணி செயலாளர் வளவை நாகராசு, தொண்டைமான் ஊராட்சி செயலாளர் ராமலிங்கம், கணபதிபுரம் ஊராட்சி செயலாளர் சின்னதம்பி, ஏ.செல்வராசு, ரவி,கொத்தகம் மாரியப்பன் காந்தி மற்றும் ஏராளமான கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்