முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறநிலைய துறை ஆணையரிடம் முறையிட மீட்பு குழு முடிவு

புதன்கிழமை, 30 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

நெல்லை, மே.30 - நித்யானந்தாவின் நியமனத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் மதுரை ஆதீன மட மீட்பு குழுவை சேர்ந்த நெல்லை கண்ணன்,இந்து சமய அறநிலைய ஆணையரை சந்தித்து முறையீடு செய்யப் போவதாக  தெரிவித்தார். இது குறித்து நெல்லையில் கண்ணன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நித்யானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமித்திருப்பது தவறான வழிநடையாகும். சைவ நெறி இளைஞர்கள் சங்கம், இதை எதிர்த்து அமைதி ஊர்வலம் நடத்தியது. வரும் ஜூன் 5 ம் தேதி மதுரையில் ஞானசம்பந்தர் குருபூஜை நடைபெறவுள்ளது. அன்று தமிழகத்தில் உள்ள சிவனடியார்கள் பலரும் மதுரை ஆதீனத்திற்குள் சென்று குருபூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே மதுரை ஆதீனத்திற்குள் நுழைந்த சிவனடியார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக உள்ளவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

வரும் 3 ம் தேதி நித்யானந்தா நியமனத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்து சமய அறநிலைய துறை ஆணையரை நானும் தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும் வழக்கறிஞருமான வெங்கட்ரமணனும் தகுந்த ஆவணங்களுடன் சந்தித்து முறையிட உள்ளோம். அங்கும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் சட்டரீதியாக ஐகோர்ட்டில் மதுரை ஆதீனத்தை மீட்க எங்களது அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும். நித்யானந்தா பிடியில் உள்ள மதுரை ஆதீனத்தை மீட்கும் முயற்சியில் முதல்வர் ஜெயலலிதாவும் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்