முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் டீசல் தட்டுப்பாடு நீங்கியது

புதன்கிழமை, 30 மே 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே. 31 -​சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. பெட்ரோல், டீசலுக்காக வாகன ஓட்டிகள் அலைந்து தவித்தனர்.  மங்களூரில் உள்ள மங்களூர் ரிபைனரி அண்ட் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் கடந்த 10 நாட்களாக செயல்படாததாலும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு வரவேண்டிய டீசல் வராததாலும், பெட்ரோல் மற்றும் டீசல் தேவை அதிகரிப்பாலும் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.  தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக 3 கப்பல்களில் 67 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் இறக்குமதி செய்யப்பட்டன. 3 கப்பல்களும் நேற்று சென்னை துறைமுகம் வந்து சேர்ந்தன. உடனடியாக அவை கொருக்குப்பேட்டையில் உள்ள சேமிப்பு கிடங்கில் இறக்கப்பட்டது.  இந்த பணி நேற்று இரவு வரை நீnullடித்தது. நேற்று காலை முதல் தரம் பிரிப்பு தொடங்கியது. சென்னை நகரில் விநியோகம் செய்யப்படும் யூரோ​4 (புகை அளவு குறைந்தது) புறநகர் பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படும். யுரோ​3 (புகை சற்று அதிகமானது) ஆகிய அடர்த்திகளில் டீசல் தரம் பிரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் பெட்ரோல் பங்க்குகளுக்கு சப்ளை செய்யப்படும்.  நேற்று மாலை முதல் படிப்படியாக தட்டுப்பாடு குறைந்து இன்று நிலைமை சீரடையும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். சென்னைக்கு தினமும் 2,100 கிலோ லிட்டர் பெட்ரோலும் 2,500 கிலோ லிட்டர் டீசலும் தேவைப்படுகிறது. தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள டீசல் 20 முதல் 25 நாட்களுக்கு தாக்கு பிடிக்கும். அதற்குள் மங்களூர் ரிபைனரி செயல்பட தொடங்கி விட்டால் பிரச்சினை இருக்காது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்