முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிகள் திட்டமிட்டப்படி ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும்

புதன்கிழமை, 30 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.31 - தமிழ்நாடு முழுவதும் தேர்வுக்கு பிறகு அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மே 1-ந்தேதி முதல் விடுமுறை விடப்பட்டிருந்தது. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று அரசு உதவி பெறும் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. 

இந்த சூழ்நிலையில் கோடை வெயிலின் உக்கிரத்தால் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. கத்தரி வெயில் முடிந்த பிறகும் சென்னையில் 108 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இதனால்  பள்ளிகள் திறப்பது தள்ளி போகுமோ? என்ற கேள்வி பெற்றோரிடையே ஏற்பட்டது. 

தனியார் பள்ளிக்கூடங்கள் ஜூன் 4 -ந்தேதியும், சி.பி.எஸ்.சி.பள்ளிகள் 18-ந் தேதியும் திறக்கப்படுகின்றன. 

எனவே அரசுப் பள்ளிகள் திறப்பது தள்ளிப் போகுமோ?  என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு அவர்கள் கூறியதாவது:-

கத்தரி வெயில் முடிவடைந்து விட்டதால் படிப்படியாக வெயிலின் உக்கிரம் குறையும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே திட்ட மிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இதில் மாற்றம் எதுவும் இல்லை.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்