முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக வேட்பாளர் கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம்

புதன்கிழமை, 30 மே 2012      அரசியல்
Image Unavailable

கந்தர்வகோட்டை மே - 30  - புதுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் அடுத்தமாதம் நடைபெற உள்ள இடைத் தேர்தலையொட்டி கறம்பக்குடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் கிராமம் கிராமமாகச் சென்று அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று பிரச்சாரம் செய்தார். புதுக்கோட்டை தொகுதி இடைத் தேர்தல் 12ந் தேதி நடக்க இருக்கிறது. இதில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் தொகுதி முழுவதும் சுற்று பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். அத்துடன் பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்த வருகின்றனர். இன்று கறம்பக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் மஞ்சங்கரை, அதிரான்விடுதி, வெள்ளாளவிடுதி, வளங்கொண்டான்விடுதி, மீனம்பட்டி, மோலுடையான்பட்டி, ஆயிப்பட்டி, கருப்பட்டிப்பட்டி, இடையப்பட்டி, உள்ள சுமார் 40 கிராமங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். 

பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான், தன்னை வெற்றி பெறச் செய்தால், பகுதியில் உள்ள சாலை வசதி, குடிநீர் வசதி, அனைத்து வசதிகளையும் உடனடியாகப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார். இந்நிகழச்சியில் முன்னாள் அமைச்சர் ஆலங்குடி சட்ட மன்ற உறுப்பினரும் கு.ப.கிருஷ்ணன், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார், கறம்பக்குடி ஒன்றிய செயலாளர் சண்முகம், கறம்பக்குடி ஒன்றிய குழு தலைவர் கெங்கையம்மாள் சொக்கலிங்கம், திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், கருப்பட்டிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சொக்கலிங்கம், பழனியப்பன், மணி, கல்யானசுந்தரம், அழகன்விடுதி ஊராட்சி செயலாளர் முருகேசன் மற்றும் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்