முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தேதி மாற்றம்

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூன்.1 - பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தேதி மாற்றப்பட இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார். பிளஸ் 2 தேர்வுகள் வெளியானதை அடுத்து மாணவர்கள் மேல்படிப்புக்காக விண்ணப்பங்கள் அனுப்புவதில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவம் படிக்கவும், பொறியியல் படிக்கவும் விரும்புகின்றனர்.

அதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பொறியியல் படிப்பிற்காக nullர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6​ந்தேதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான கவுன்சிலிங் ஜூலை மாதம் 2​ந்தேதி முதல் நடைபெறும் எனவும் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் ஜூலை மாதம் 9​ஆம் தேதி முதல் நடைபெறும் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.  சிலதினங்களுக்கு முன்பு, ஜூலை மாதம் 5​ந்தேதி மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பொறியியல் கவுன்சிலிங்குக்கான தேதியும் தள்ளிப் போகும் எனத் தெரிகிறது.

இதனையடுத்து பொறியியல் கவுன்சிலிங்குக்கான தேதி மாற்றப்பட இருப்பதாகவும், இதுகுறித்து பல்கலைக் கழக கூட்டத்தில் பேசி முடிவெடுத்தபின் தேதி அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்