முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ. கூட்டணி - இடதுசாரிகள் நாடு முழுவதும் பந்த்

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.1 - பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, இடதுசாரி கட்சிகள் நேற்று நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தின. இதற்கு கர்நாடகம், மகாராஷ்டிரம், மேற்குவங்கம் ஆகிய மாநில்களை தவிர இதர மாநிலங்களில் ஓரளவே ஆதரவு இருந்தது. பெட்ரோல் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.7.54 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போகுக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தமிழகத்தில் ஆளும் பிரதான கட்சியான அ.தி.மு.க. சார்பாக கடந்த 29-ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக கண்டன பேரணி நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் தி.மு.க. சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால் தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் மே 31-ம் தேதி பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் இடதுசாரி கூட்டணி கட்சிகளும் பந்த் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தன. அதன்படி நேற்று பந்த் போராட்டம் நடைபெற்றது. கர்நாடகம், மேற்குவங்காளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு இருந்தது. கர்நாடகத்தில் பாரதிய ஜனதா ஆட்சி உள்ளது. அதேசமயத்தில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்கு உள்ளது. இதனால்தான் இந்த இரண்டு மாநிலங்களிலும் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு இருந்தது. அதேமாதிரி மேற்குவங்க மாநிலத்தில் இடதுசாரி கட்சிகள் நடத்திய கடையப்பு போராட்டத்திற்கு மக்களிடத்தில் நல்ல ஆதரவு இருந்தது. இதர மாநிலங்களில் பந்த் போராட்டத்திற்கு ஓரளவே ஆதரவு இருந்தது. 

நாட்டின் தலைநகர் டெல்லியில் பந்த் போராட்டத்திற்கு மக்களிடத்தில் ஓரளவே ஆதரவு இருந்தது. சில இடங்களில் போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர். காலையில் பல இடங்களில் சிறு சிறு கடைகள் எல்லாம் திறந்திருந்தன. அதேசமயத்தில் பந்த் போராட்டத்திற்கு ஆட்டோ, ரிக்ஷா,டாக்சி ஓட்டுனர்கள் ஆதரவு கொடுத்ததால் ஆட்டோக்கள், வாடகை கார்கள் சரியாக ஓடவில்லை. நாட்டின் நிதி நகரான மும்பையின் புறநகர் பகுதியில் பந்த் ஆதரவாளர்கள் பஸ்கள் மீது கல்வீசி தாக்கினர். புனே, நாக்பூர், தானே ஆகிய நகரங்களிலும் பந்த் போராட்ட ஆதரவாளர்கள் கல்வீசி தாக்கினர். சதாரா மாவட்டத்தில் பந்த் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலத்தில் பந்த் போராட்டத்திற்கு ஞுஆதரவு இருந்தது. 3 பஸ்களுக்கு பந்த் ஆதரவாளர்கள் தீ வைத்தனர். அதனால் பெங்களூர் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் பலமணி நேரமாக வரவில்லை. கர்நாடகத்தின் சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் பஸ்கள் ஓடவில்ல. பீகார் மாநிலத்தில் பந்த் போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அமைப்பாளர் சரத்யாதவ், பாரதிய ஜனதா தலைவர் ஷாநவாஸ் ஹூசைன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். சாஹர்சா நகரில் நடைபெற்ற பந்த் போராட்டத்தில் சரத்யாதவுடன் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். பகல்பூர் நகரில் கடைகளை அடைக்க வலியுறுத்திய பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் மற்றும் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்