முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல்வாதிகளை சேர்த்திருப்பதால் பா.ஜ.வுக்கு களங்கம்

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,ஜூன்.1 - வேறு கட்சிகளை பாரதிய ஜனதாவில் சேர்த்திருப்பதால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என்று எல்.கே. அத்வானி கவலையுடன் கூறியுள்ளார்.  மும்பையில் நடைபெற்ற தேசிய நிர்வாகக்குழு கூட்டத்தில் நிதின்காட்ரி மீண்டும் பா.ஜ. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது எல்.கே. அத்வானிக்கு பிடிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத் ஆகியவைகளின் வற்புறுத்தலின்பேரில் நிதின்கட்காரி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் மும்பையில் நடைபெற்ற நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின்பு நடைபெற்ற பேரணியில் எல்.கே. அத்வானியும் சுஷ்மா சுவராஜூம் கலந்துகொள்ளவில்லை. மேலும் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தினமும் ஒரு ஊழல் வெளியாகிக்கொண்டியிருக்கிறது. இதை மக்களிடத்தில் அம்பலப்படுத்தி பாரதிய ஜனதா நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறது. இந்தநிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஊழல் காரணமாக பல அமைச்சர்களை பகுஜன்சமாஜ் கட்சியில் இருந்து மாயாவதி நீக்கியுள்ளார். அவர்களுக்கு பாரதிய ஜனதாவில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அத்வானி கடுமையாக எதிர்த்து உள்ளார். இது தொடர்பாக அவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஊழல்வாதிகளை சேர்த்திருப்பதால் பாரதிய ஜனதாவுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகளால் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. நான் ஒரு பத்திரிகையாளராக இருந்ததால் அது குறித்து எனக்கு நன்றாகவே புரிந்துள்ளது. இதை பாரதிய ஜனதா பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக பாரதிய ஜனதாவும் தன்னை ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் எல்.கே. அத்வானி மேலும் கூறியுள்ளார். இந்த அறிக்கையின் மூலம் அத்வானிக்கும் நதின்கட்காரிக்கும் இடையே உள்ள மோதல் வெளிப்படையாக அம்பலமாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago