முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மொகாலியில் இன்று பலப்பரிட்சை

புதன்கிழமை, 30 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மொகாலி, மார்ச். - 30  - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொகாலியில் இன்று நட க்க இருக்கும் 2 - வது அரை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன. இந்தப் போட்டி பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. முதல் அரை இறுதி ஆட்டம் கொழும்பில் இன்று நடக்கிறது. இதில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதனைத் தொடர்ந்து 2 -வது அரை இறுதி ஆட்டம் மொகாலியில் இன்று நடக்கிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத ஆயத்தமாக உள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சி எடுத்துள்ளனர். 

மும்பையில் 2008 -ம் ஆண்டு நடந்த தாக்குதலுக்குப் பிறகு இரு அணிக ளும் முதல் முறையாக மோத உள்ளன. இதனால் இந்தப் போட்டி மீது ரசிகர்களுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 

3 -வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால், இந்த ஆட்டம் மிகுந்த விறுவிறுப் பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் மட்டுமே தோற்றது. அதுவும் வெற்றியின் விளிம்பு வரை வந்து தோற்றது. கால் இறுதியில் உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியால் இந்திய அணி வீரர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 

இந்திய அணியின் பலமே பேட்டிங் வரிசை தான். பேட்டிங்கில் தொ டக்க வீரர் சேவாக், டெண்டுல்கர், யுவராஜ் சிங், காம்பீர்  நல்ல நிலை யில் உள்ளனர். அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் நிலைத்து நின்று ஆடி னால் மிகப் பெரிய ரன்னை குவிக்க முடியும். 

கேப்டன் தோனி பேட்டிங்கில் திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தி ய அணி சிறப்பாக விளையாடியது. இதனால் அதே அணி பாகிஸ்தா னுக்கு எதிராக விளையாடும், மாற்றம் இருக்காது என்று தெரிகிறது. ரெய்னாவே தொடர்ந்து நீடிக்கப்படுவார். 

பந்து வீச்சில் ஜாஹிர்கான் முதுகெலும்பாக உள்ளார். சிறந்த ஸ்விங் பெளலரான அவர் பாகிஸ்தானுக்கு எதிராக மிகவும் முக்கியமான ஆட்டத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை கைப் பற்ற வேண்டும். அவருக்கு இணையான வேகப் பந்து வீரர் இல்லை. 

முனாப் படேல் முத்திரை பதிக்கா விட்டாலும் அவரே தொடர்ந்து நீடிப்பார். முதன்மை சுழற் பந்து வீரரான அஸ்வின் கடந்த 2 போட்டி யிலும் நன்றாகவே பந்து வீசினார். வெற்றி அணி என்ற கருத்தில் தோ னி அணியில் மாற்றம் செய்யமாட்டார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து இந்தியாவின் பீல் டிங் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதே நிலை நீடிக்க வேண்டும். பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 3 -வது முறையாக இறுதிப் போட்டி க்கு நுழையுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. 

கடைசியாக 2003 -ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பையில் கங்குலி தலைமையிலான அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. 

1983 -ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கோப்பையை கைப்பற்றியது. 1987 -ம் ஆண்டிலும், 1996 - ம் ஆண்டிலும் அரை இறுதியில் தோற்றோம். 

பாகிஸ்தானை வீழ்த்த இந்திய வீரர்கள் அனைவரும் முழுத்திறமையு டன் ஆட வேண்டும். பதட்டம் இல்லாமல் பெருமை சேர்க்கும் வகை யில் ஆட வேண்டும். இறுதிப் போட்டிக்குள் நுழைய கிடைத்த வாய்ப்பை இந்திய வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

பாகிஸ்தான் அணியும் 3 -வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. 1992 -ம் ஆண்டு இம்ரான் தலையமையி லான அணி இறுதிப் போட்டிக்கு நுழைந்து கோப்பையை வென்றது. 1992 -ல் இறுதிப் போட்டிக்கு வந்து ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. 1979, 1987 - ல் அரை இறுதியில் தோற்றது. 

பாகிஸ்தான் அணி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் மட்டுமே தோற்றது. இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளை வீழ்த் தி இருந்தது. கால் இறுதியில் மே.இ.தீவு அணியை 10 விக்கெட் வித்தி யாசத்தில் தோற்கடித்தது. இதனால் அந்த அணியும் மிகுந்த நம்பிக்கை யுடன் உள்ளது. 

பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் பலம் பெற்று திகழ்கிறது. கேப்டன் அப்ரிடி, உமர் குல், அப்துல் ரசாக், ரகுமான், அஜ்மல், ஹபீஸ் ஆகி யோர் பந்து வீச்சில் முத்திரை பதித்து வருகிறார்கள். சோயிப் அக்தரு க்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. 

பேட்டிங்கில் ஹபீஸ், ஆசாத், மிஸ்பா, யூனிஸ்கான், அக்மல் சகோதர ர்கள், கேப்டன் அப்ரிடி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இந்தி    யாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுக்கும் வகையில் பாகிஸ் தான் வீரர்கள் விளையாடுவார்கள். மிகவும் நெருக்கடியான இந்தப் போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. 

பகல் - இரவாக நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. தூர்தர்ஷன், ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago