முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட அதிபர் சங்க பொதுக்குழு தடையை நீக்க மனு

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.1 - பட அதிபர் சங்க பொதுக்குழு தடையை நீக்க வேண்டும் என்று இப்ராகிம் ராவுத்தர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பிளவு ஏற்பட்டு உள்ளது. சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரனுக்கு போட்டியாக அதிருப்தி கோஷ்டியினர் தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் அட்ஹாக் கமிட்டி அமைத்துள்ளனர்.

இக்கமிட்டி சென்னையில் நேற்று (30 -ந்தேதி) பொதுக்குழுவை கூட்டப்போவதாக அறிவித்தது. ஆனால் இப்பொதுக்குழுவை கூட்ட ஐகோர்ட்டு தடை விதித்தது.

தடையை நீக்கக்கோரி இப்ராகிம் ராவுத்தர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில், கூறி இருப்பதாவது:​

தயாரிப்பாளர் சங்கத்துக்கு எனது தலைமையில் அட்ஹாக் கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டி சட்ட விரோதமானது என அறிவிக்கக்கோரி கலைப்புலி தாணு வழக்கு தொடர்ந்துள்ளார். அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் என் தலைமையில் மே 30​ல் கூட இருந்த பொதுக்குழுவுக்கு தடைக்கோரியும் தாணு மனு தாக்கல் செய்துள்ளார். அம் மனுவை கோர்ட்டு விசாரித்து பொதுக்குழுவுக்கு தடை விதித்துள்ளது.

இந்த வழக்கை தொடர்ந்த தாணுவுக்கு அதிகாரம் இல்லை. அவர் சங்கத்தில் உறுப்பினர்தான். செயற்குழு எடுத்த முடிவை எதிர்த்து அவர் வழக்கு தொடர முடியாது. எனவே அவர் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும். பொதுக்குழுவுக்கு விதிக்கப்பட்ட தடையை க்க வேண்டும்.

இவ்வாறு இப்ராகிம் ராவுத்தர் சார்பில் வக்கீல்கள் யாகேஷ்வரன், ராமகிருஷ்ணன் மனுதாக்கல் செய்தனர். இவ்வழக்கு நீதிபதி கர்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி ஏற்கனவே தயாரிப்பாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், அந்த வழக்குடன் இந்த  வழக்கையும் சேர்த்து வரும்  ஜூன் 6-ந்தேதிக்கு விசாரிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago