முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரச்சாரத்தில் குதித்தார் ஜெகனின் தாயார்

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

நகரி, ஜூன். 1 - ஆந்திராவில் 18 சட்டசபை தொகுதிகள் மற்றும் நெல்லூர் எம்.பி. தொகுதி உட்பட 12 ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை தேர்தல் முதல் நாள் 11 ம் தேதி வரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு பதிலாக அவரது தாயார் விஜயலெட்சுமி தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளார். 

அவர் தனது முதல் கட்ட பிரச்சாரத்தை நரசன்னபேட்டையில் துவக்கினார். அவரோடு அவரது மகள் ஷர்மிளாவும் சென்றுள்ளார். விஜயலெட்சுமி பிரச்சாரத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். பிரச்சாரத்தின் போது விஜயலெட்சுமி பேசியதாவது, 

எனது கணவர் காங்கிரஸ் கட்சிக்காக அரும்பாடுபட்டவர். மாநிலத்தில் 2 முறை ஆட்சி பீடத்தில் அமர வைத்தார். ஆந்திர மக்களின் மனதில் இடம் பிடித்த அவர் 2009 ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அவருடைய மரணத்தில் எங்களுக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளது. மலையில் ஹெலிகாப்டர் மோதியிருந்தால் ஹெலிகாப்டர் பாதியாக பிளந்திருக்கும். ஆனால் ஹெலிகாப்டர் தூள் தூளாக சிதறியுள்ளது. இதை பார்க்கும்போது எங்களுடைய சந்தேகம் அதிகமாகிறது. 

சோனியா காந்திக்கு எங்களது குடும்பத்தின் மீது ஏதோ ஒரு விதத்தில் வெறுப்பு உள்ளது. அதனால் எங்கள் குடும்பத்தை சி.பி.ஐ. போலீசார் மூலம் பழிவாங்க நினைக்கிறார். கடந்த 11 மாதங்களாக என் மகன் ஜெகன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஆதாரங்களை திரட்டினார்கள். ஆனால் எந்த ஆதாரமும் சிக்கவில்லை. தற்போது இடைத் தேர்தல் சமயத்தில் எனது மகனை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? சோனியா காந்தியின் அடக்குமுறைக்கு ஆந்திர மக்கள் வரும் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். 

என் மகனுக்கு சோனியா செய்து வரும் கொடுமைகளுக்கு நீதி கேட்டு மக்களிடம் வந்துள்ளேன். இந்த தேர்தலில் ஆந்திர மக்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago