முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எஸ்.என்.எல். சார்பில் கையடக்க கணினிகள் அறிமுகம்

வியாழக்கிழமை, 31 மே 2012      வர்த்தகம்
Image Unavailable

 

சென்னை, மே.31 - சென்னை மற்றும் தமிழ்நாடு தொலைப்பேசி வட்டாரங்கள் தனியார் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த விலையிலான கையடக்க கணினிகளை (டி​பேட்) நேற்று அறிமுகப்படுத்தின. இதன் அறிமுக விழா அண்ணாசாலை தொலைப்பேசி அலுவலகத்தில் நடந்தது.

சென்னை தொலைப்பேசி தலைமை பொது மேலாளர் சுப்பிரமணியன், ஐ.எஸ். 70, ஐ.ஆர். என்ற கையடக்க கணினியை அறிமுகப்படுத்தி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். தொழில் அதிபர் துரைசாமி, முதல் கணினியை பெற்றுக் கொண்டார். 703​சி என்ற மாடலை தமிழ்நாடு தொலைபேசி தலைமை பொது மேலாளர் அஷ்ரப்கான் அறிமுகப்படுத்தி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். தமிழக கலை மற்றும் பன்பாட்டு துறை செயலாளர் குணசேகரன் முதல் 703​சி மாடல் கணினியை பெற்றுக் கொண்டார்.  பள்ளி மாணவி மயூரி, என்ஜினீயரிங் கல்லூரி மாணவி காவ்யா ஆகியோரும் பெற்றுக் கொண்டனர். பின்னர் இந்த புதிய வகை கையடக்க கணினிகளின் சிறப்பு அம்சங்கள் குறித்து தொலைப்பேசி பொது மேலாளர் கூறிய தாவது: ஐ.எஸ்.70 ஐ.ஆர். என்ற மாடலின் விலை ரூ.3495. இதில் ஆண்டிராய்டு 2.3 ஆபேரட்டிங் சிஸ்டம், 2 ஜி.பி. மெமரி, 3டி விளையாட்கள், கேமிரா வசதியும் உள்ளன. 703​சி மாடலில் ஆண்டிராய்டு 4.1 ஆபரேட்டிங் சிஸ்டம், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி, வை​பை இணைப்பு பெறும் வசதி உள்ளன. இதன் விலை ரூ.6499. இந்த 2 மாடல்களுமே செல்போனை விட சற்று பெரிதாக கையடக்கமாக உள்ளன. மிக எளிதாக கையில் கொண்டு செல்ல முடியும். லேப்​டாப்பில் என்னென்ன பணிகள் செய்யலாமோ அத்தனையும் இவற்றில் மேற்கொள்ள முடியும். பி.எஸ்.என்.எல்.​நிறுவனத்தின் 2ஜி மற்றும் 3 ஜி சிம்கார்டுகளை இதில் பயன்படுத்தலாம். இந்த சிம்கார்டுகளை டேட்டா கார்டுகள் மூலம் கருவியில் பொருத்த வேண்டும். இன்னும் 15 நாட்களில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மேலும் ஒரு நவீன மாடல் அறிமுகம் செய்யப்படும். இதில் பேசும் வசதியும் இடம் பெறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!