முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்: ஆளுநர் முடித்துவைத்தார்

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.2 - தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரை  தமிழக ஆளுநர் ரோசையா முடித்துவைத்து அறிவிப்பாணையை வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 26-ம்  தேதி தொடங்கியது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதையொட்டி நிதிநிலை குறித்து பல்வேறு  கட்சித்தலைவர்கள் உட்பட அனைத்து உறுப்பினர்களும் பேசினர். அதையடுத்து பல்வேறு துறைகளின் துணை மானியக் கோரிக்கைகள் நிறைவேறின.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் காவல் துறை அதிகாரிகளுக்கு சொந்த வீடு திட்டம், உயர்த்தப்பட்ட மின் கட்டணம் விசைத்தறி உரிமையாளர்களுக்காகக் குறைக்கப்பட்டது, மற்றும் மின்பற்றாக்குறையைப் போக்க தற்போதுள்ள மின் உற்பத்தித் திட்டங்களை முடுக்கிவிட்டது. மின் கட்டண உயர்வுக்காக தமிழக அரசு கூடுதலாக 1,118.44 கோடி ரூபாய் மானியம் அளித்தது, ஏழை நடுத்தர மக்களுக்கான மின் கட்டண சுமையைக் குறைக்க கூடுதலாக 740 கோடி ரூபாய் மானியம் அளித்தது. மற்றும் மாவீரன் தீரன் சின்னமலைக்கு நினைவுச்சின்னம், மொழிப்போர் தியாகி சங்கரலிங்கனாருக்கு மணிமண்டபம் ஆகியவற்றை முதல்வர் அறிவித்தார். மேலும்   அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்காக சுமார் 18 லட்சம் பேர்களுக்காக 1,383.49 கோடி அளவுக்கு 7 சதவிகிதம் அகவிலைப்படியையும் அவர் உயர்த்தினார். மொத்தம் 52 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடந்தது.

இறுதியாக ஓராண்டு சாதனை சிறப்புக் கூட்டமும் மே.16-ம் தேதியன்று நடந்தது. அப்போது நூறாண்டுக்கால சாதனைகளை ஓராண்டில் முதல்வர் ஜெயலலிதா செய்துள்ளதாக அனைத்துக் கட்சியினரும் முதல்வரைப் பாராட்டிப் பேசினர். இறுதியாகப் பேசிய முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட அனைத்துக் கட்சிகளும் ஓரணியாக நிற்க வேண்டும் என்று  அழைப்பு விடுத்தார். 

இத்துடன் சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.

ஆளுநர் முடித்துவைத்தார்:

இப்போது இந்தக் கூட்டத்தொடரை ஆளுநர் ரோசைய்யா முடித்துவைத்துள்ளார்.

அரசியல் சட்டம் 174-வது பிரிவு விதி எண். 2-ன்கீழ் முதல் துணைப் பிரிவுக்குட்பட்ட அதிகாரத்தின்படி கடந்த மார்ச் 26-ம் தேதியன்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்துவைப்பதாக ஆளுநர் ரோசைய்யா அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளார். இதன்படி இந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. இந்த அறிவிப்பாணையை  சட்டப்பேரவை அலுவலகச் செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன்  வெளியிட்ட அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago