முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மீது நம்பிக்கை இல்லை என்கிறார் ஹசாரே

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      ஊழல்
Image Unavailable

 

ரத்னகிரி. ஜூன்.2 - பிரதமர் மன்மோகன் சிங் மீது தனக்கிருந்த நம்பிக்கையை இழந்து விட்டதாக சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே மத்திய  அரசை வலியுறுத்தி வருகிறார். இதற்காக அவர் ஏற்கனவே பல போராட்டங்களை நடத்தியுள்ளார். இப்போது இவர் ஊழலுக்கு எதிராக மகாராஷ்டிர மாநிலத்தில்  பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக அவர் ரத்னகிரியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசினார். 

அப்போது அவர் கூறுகையில் நாட்டில் ஊழலை ஒழிக்க மத்திய அரசு போதுமான நடவடிக்கை எதையும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

பிரதமர் 

முதலில்  பிரதமர் மீது தான் அதிக நம்பிக்கை வைத்திருந்ததாகவும் ஆனால் இப்போது அந்த நம்பிக்கையை தான் இழந்து விட்டதாகவும் அவர் வருத்தப்பட்டார்.

நாம் முதலில் நல்ல குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களை தேர்ந்தெடுத்து அவர்களை  பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த 65 ஆண்டுகளில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ஒரு  சட்டம் கூட லோக் சபைலிய்ல் கொண்டு வரப்படவில்லை. இதே போல மாநில சட்டமன்றங்களிலும் இது போன்ற ஒரு சட்டம் கொண்டு வரப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அரசியல்வாதிகள்  பலரும் ஊழலில் சிக்கியுள்ளனர். அவர்கள் சுய லாபம் அடைந்து வருகின்றனரே தவிர மக்களுக்கு  எந்த நன்மையும் கிடைப்பதில்லை என்றும் அவர் கூறினார்.

மக்கள் பணத்தை தலைவர்களே  அதிகம் பயன்படுத்துகின்றனர். அரசு அதிகாரிகள்  லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடுகின்ஹனர். இந்த வகையில் பார்க்கும் போது மக்கள் பணத்தில் வெறும் 10 சதவீதம்தான்  வளர்ச்சி பணிகளுக்காக செலவிடப்படுகிறது என்றும் அவர் குறை கூறினார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் தேசிய வளர்ச்சியை எப்படி காண முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்