முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ராஜினாமா

சனிக்கிழமை, 2 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

பெங்களூர், ஜூன். 2 - கர்நாடகத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி உட்கட்சி மோதல் நிலைகுலைந்து போய்கிடக்கும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸிலும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. தமது ஆதரவாளருக்கு சட்ட மேலவை சீட் வழங்கப்படாததைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து மூத்த தலைவர் சித்தராமையா பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். சட்டமேலவைக்கு தமது தீவிர ஆதரவாளரான சி.எம். இப்ராகிம் என்பவரை சித்தராமையா பரிந்துரைத்திருந்தார். ஆனால் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பரமேஸ்வர் வெளியிட்டிருந்த அறிக்கையிலோ இப்ராகிம் பெயர் இடம்பெறவில்லை. இதில் செமகடுப்பாகிப் போனார் சித்தராமையா. எப்படியும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. வின் உட்கட்சி மோதலைப் பயன்படுத்தி முதல்வராகிவிடலாம் என கனவு கண்டு கொண்டிருந்த சித்தராமையாவுக்கு பரமேஸ்வர் செக் வைத்துவிட்டது பேரதிர்சியாக இருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தமது ஆதரவாளர்களுடன் திடீரென ரகசிய ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக சோனியா காந்திக்கு பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பினார் சித்தராமையா.இதனால் கர்நாடக காங்கிரஸிலும் உட்கட்சி பூசல் விஸ்வரூபமெடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்