முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பையில் தோல்வி எதிரொலி கப்டன் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகல்

புதன்கிழமை, 30 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சிட்னி, மார்ச். - 30  - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல் வி அடைந்ததன் எதிரொலியாக அந்த அணிக்கு தலைமை தாங்கிய ரிக்கி பாண்டிங் பதவியில் இருந்து விலகினார். இது பற்றிய விபரம் வருமாறு -  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கால் இறுதியில் இந்தியாவிடம் தோற்றது. இந்த தோல்வியால் கேப்டன் பாண்டிங்கிற்கு நெருக்கடி ஏற்பட்டது. கேப்டன்  பதவியில் இருந்து பாண்டிங்கை நீக்க வேண்டும் என ஆஸ்தி ரேலிய முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர். தேர்வுக் குழுக் கூட்டத்தி ல் இது குறித்து முடிவு செய்யப்படுவதாக இருந்தது. 

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியில் இருந்து நேற்று பாண்டிங் திடீரென விலகினார். சிட்னியில் நிருபர்களைச் சந்தி த்த அவர் தனது ராஜினாமா குறித்து கூறியதாவது - 

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு இது தான் சரியான தருணம். இன்னொருவருக்கு கேப் டன் பதவி வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கருதி இந்த முடிவை எடுத்தேன். 

கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் நான் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன். இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்தார். 

இங்கிலாந்துக்கு  எதிரான ஆஸி. தொடரை இழந்த போது, கேப்டன் பதவியில் பாண்டிங்குக்கு நெருக்கடி ஏற்பட்டது. உலகக் கோப்பை கால் இறுதியில் தோற்றதால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் பதவி விலகினார். 

பாண்டிங்குக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக மைக்கேல் கிளார்க் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. 134 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாண்டிங் சிறந்த கேப்ட னாவார். 

2004 -ம் ஆண்டு டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் 77 டெஸ்டில் 48 போட்டியில் வெற்றி கிடைத்த து. 16 டெஸ்டில் தோற்றது. 13 டெஸ்ட் டிரா ஆனது. 

2002 -ம் ஆண்டு ஒரு நாள் போட்டி கேப்டனாக பொறுப்பேற்றார். 227 போட்டியில் 162 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 50 போட்டியில் தோற்றது. 2 ஆட்டம் டையில் முடிந்தது. 12 ஆட்டம் முடிவு இல்லை.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்