முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.824 கூடியது...!

சனிக்கிழமை, 2 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜுன் 3 - தங்கம் விலை நேற்று முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 824 உயர்ந்துள்ளது. மஞ்சள் உலோகம் என்று அழைக்கப்படும் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்துவந்தது. தென் ஆப்பிரிக்காவில் அதிகம் கிடைக்கும் தங்கம் ஆசியாக் கண்டத்தில்தான் அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்கின்றன. பல வருடங்களாக தங்க இறக்குமதியில் இந்தியாதான் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது சீனா இந்த இடத்தை கைப்பற்றி முதலிடத்தை வகிக்கிறது. நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சீனா 255.2 டன் தங்கத்தை இறக்குமதி செய்தது. அதே நேரத்தில் இந்தியா 207.6 டன் தங்கத்தைத்தான் வாங்கியுள்ளது.  இதனால் தங்கத்தின் விலை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.  

இந்த நிலையில் தங்கத்தின் விலை நேற்று கிடு கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை சென்னையில் நேற்று ரூ.2841 ஆக விற்கப்பட்டது. ஒரு பவுன் தங்கம் ரூ. 22,728 ரூபாயாக உயர்ந்தது. நேற்று முன்தின விலையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒரு பவுனுக்கு நேற்று ரூ. 824 கூடியுள்ளது.  இந்த விலை உயர்வு தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. திருமணம் போன்ற முக்கிய வைபவங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் தங்கத்தை வாங்குவது வழக்கமாக இருந்துவருகிறது. இந்த விலை உயர்வு சாதாரண, நடுத்தர மக்களை கவலை அடைய வைத்துள்ளது. இந்த கிடு கிடு விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே காரணம் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். உலக பொருளாதாரத்தில் இன்னமும் தேக்கநிலை நிலவி வரும் அதே வேளையில் கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியும் இந்த தங்க விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்