முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு

சனிக்கிழமை, 2 ஜூன் 2012      ஊழல்
Image Unavailable

 

திண்டுக்கல், ஜூன்.3 - திண்டுக்கல்லில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டில் போலீசார் ரெய்டிற்கு சென்ற போது தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபட்டு அவர்களை வெளியே விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் முரளிதரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது, மற்றும் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ளது. இந்நிலையில் குஜிலியம்பாறை அருகிலுள்ள கூம்பூர் காவல் நிலைய போலீசார் முரளிதரனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இச்சூழ்நிலையில் திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமியின் வீடு திண்டுக்கல் மேற்கு அசோக் நகரில் உள்ளது. இங்கு நேற்றுக்காலை சுமார் 9 மணியளவில் திண்டுக்கல் டவுன் டி.எஸ்.பி. சுருளிராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அசோகன், செல்லத்துரை மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஐ.பெரியசாமி வீட்டில் இல்லை. வீட்டினுள் பல்வேறு இடங்களிலும் போலீசார் ரெய்டு நடத்தினர். இத்தகவல் அறிந்தவுடன் உ.பி.க்கள் ஐ.பெரியசாமியின் வீட்டு முன்புறம் கூடினர். சோதனை முடிந்து வெளியே வந்த காவல்துறையினரை மறித்து கோஷமிட்டனர். மேலும் அவர்களை வெளியே செல்ல விடாமல் கதவைப் பூட்டு போட்டு மூடினர். இதனால் சற்று பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. 

பின்னர் உ.பி.க்கள் கதவை திறந்து விடவும் போலீசார் வெளியேறி ஜீப்பில் சென்றனர். அப்போதும் காவல்துறையினருக்கு எதிராக கோஷமிட்டனர். இதுகுறித்து உ.பி. நிர்வாகி ஒருவர் தெரிவிக்கையில், ஐ.பெரியசாமியின் வீட்டில் சோதனை மற்றும் கைது பிறப்பிக்க உத்தரவு உள்ள ஆணை எதுவும் போலீசார் கொண்டு வரவில்லை. ஆகவே நாங்கள் அவர்களுக்கு எதிராக கோஷமிட்டோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து அவரது வீட்டு முன்புறம் உ.பி.க்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். காவல்துறையினரை பணி செய்ய விடாமல் உ.பி.க்கள் அராஜகத்தில் ஈடுபட்டது அப்பகுதி மக்களை முகம் சுளிக்க வைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்